தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (அக்.14) தொடங்கியது. இன்றைய தினம் இன்று கேள்வி நேரம் முடிந்தபிறகு கரூர் துயரச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
ஆனால் அ.தி.மு.கவினர் வேண்டும் என்றே, முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன்., கரூர் துயர சம்பவத்தை கேள்வி பட்டதும், முதலமைச்சர் இரவோடு இரவாக கருர் சென்றதாக தெரிவித்தார்.
அன்று இரவு முழுவதும் முதலமைச்சர் தூங்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்ததை, எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டமா என்று அவர் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன்., முதலமைச்சரின் அறிக்கையில் ஒரு எழுத்துக்கூட தவறு என கூறுவதற்கு திராணி இல்லாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக விமர்சித்தார். அதிமுகவினர் திருந்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.