தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது கள ஆய்வு தொடங்கியது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தில் 1.50 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தில் தகுதியுடைய எந்த மகளிரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது கள ஆய்வு தொடங்கியது.மனுக்களை ஆய்வு செய்ய களப்பணியாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் பகுதிகளுக்கு ஏற்ப மனுக்களை, கள வாரியாக பிரித்தளித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலர்கள் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கள விசாரணை குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தினசரி மாலை 6.00 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணியின் மீது தனி கவனம் செலுத்தி முடித்திட வேண்டும், மறுஉத்தரவு வரும்வரை இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories