தமிழ்நாடு

பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்...

பூம்புகாரில் ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.

பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில் ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (08.10.2025) சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறையில் மாவட்ட வாரியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கிய துறைமுகம் நகரமான பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நுழைவு கட்டண அறை, தகவல் மையம், வாகனம் நிறுத்தும் இடம், சுற்றுச்சுவர் அமைத்தல், பொருட்கள் வைக்கும் அறை, நடைபாதை, கழிப்பறை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பாரம்பரிய மின் விளக்குகள் ஏற்பாடு மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும்.

பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்...

சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நம் பாரம்பரிய மிக்க தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவில்கள், புராதான சின்னங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி வால்பாறை போன்ற இயற்கையாக அமையப்பெற்ற மலைவாச சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டுமென சுற்றுலா உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர்மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் திருமதி.ச.கவிதா அவர்கள், கண்காணிப்பு பொறியாளர், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories