நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நடிகை குறித்து அவதூறு பேசியதற்காக, சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இதனிடையே, சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கூறினார். இரு தரப்பும் பிரமாண பத்திரத்தில் கூறியதை உறுதியாக கடைப்பிடிப்பதாக தெரிவித்திருப்பதால், சீமான் - விஜயலட்சுமி விவகாரத்தை சுமூகமாக முடித்து வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சீமான் மீதான நடிகை அளித்த புகார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.