தமிழ்நாடு

”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் (Tamil Nadu State Land Use Research Board) மற்றும் ஆளுகைக்கான புத்தாக்க மையம் ( Centre for Innovation in Governance) இணைந்து, "தமிழ்நாடு நிலப்பயன்பாடு 2025: வளம்குன்றா எதிர்காலத்திற்கான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்" என்ற தலைப்பில் அக்டோபர் 6 மற்றும் 7, 2025 ஆகிய தேதிகளில் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் சர்வதேச மாநாடு நடத்தப்பெறுகிறது.

இம்மாநாட்டை அக். 6 ஆம் தேதி தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் நிலப்பயன்பாடு ஆராய்ச்சி வாரியத்தின் 15 ஆண்டுகளின் பங்களிப்புகளை பிரதிபலிக்கும் ஒரு தொகுப்பான "தமிழ்நாட்டில் நில பயன்பாட்டு ஆராய்ச்சி", நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய நிதியுதவியுடன் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தால் மேற்கொள்ளப்பட்ட "வடுவூர் - பறவைகளின் நிலப்பரப்பு" ஆகிய இரு அறிக்கைகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டார்.

இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ”அழிந்துவரும் சூழ்நிலையில் உள்ள பறவை இனமான கௌதாரி, பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பறவை இனங்கள், கால்நடைகள் மற்றும் காட்டு முயல்கள் பற்றிய ஆராய்ச்சியின் அவசியத்தையும், தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 1975 – ல் துவங்கப்பட்ட நிலப்பயன்பாடு வாரியத்தின் பணிகளையும், 2011 -ல் நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியமாக மாற்றப்பட்டது. மேலும், பல்வேறு ஆராய்வாளர்களை ஒன்றிணைத்தும், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளான SDG 11, 13 &15 ஆகியவற்றை எய்தும் வகையிலும் இம்மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும் வரப்பெற்ற புதிய ஆராய்வு கருத்துக்களை வெளிப்படுத்தும் விளக்கக்காட்சி அமர்வினையும் துவக்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories