தமிழ்நாடு

மீட்டெடுக்கப்படும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு: 1,500 பசுமை மரக்கன்றுகள் நட திட்டம் - சென்னை மாநகராட்சி !

மீட்டெடுக்கப்படும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு: 1,500 பசுமை மரக்கன்றுகள் நட திட்டம் - சென்னை மாநகராட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ள கொடுங்கையூரில் இதுவரை 20.16 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மேலும் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில், 57 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் 1000 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மண்டலம் 1 முதல் 8 வரையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொடுங்கையூர் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது .

மீட்டெடுக்கப்படும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு: 1,500 பசுமை மரக்கன்றுகள் நட திட்டம் - சென்னை மாநகராட்சி !

இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூரிலும் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, ரூபாய் 641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். அதில் இதுவரை 20.16 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. தொகுப்பு 1 மற்றும் 2ன் வாயிலாக சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாயிலாக ரூபாய் 57 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

banner

Related Stories

Related Stories