இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கெடுத்துக் கொள்ளாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால், மதநல்லிணக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு மூளை சலவை செய்த இந்துத்வா சக்திகளில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் பங்கு இருக்கிறது.
இந்தியா விடுதலையடைந்த பிறகு, தேசிய கொடியை ஏற்றுக் கொள்ள மறுத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் தலைமையில் தயாரிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிரிதி அடிப்படையில் இல்லை என்ற காரணத்தினால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர் விமர்சனம் செய்ததை எவரும் மறுத்திட இயலாது. இந்திய மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை ஏறத்தாழ ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிற்னர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி" சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.