அரியலூர் மாவட்டம் , கூவத்தூர் அகினேஸ்புரம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார் கோயிலுக்கு புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இந்த மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த புதிய வழித்தடம் குறித்தும் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்னார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து செப்.18 ஆம் தேதி அகினேஸ்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கு செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பேருந்து சேவை, அகினேஸ்புரம் மக்களின் பயணத்தை எளிதாக்குவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும். மக்களின் குரலை உடனுக்குடன் கேட்டு, 20 ஆண்டு கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிய திமுக அரசின் இந்த மாபெரும் சாதனை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அவர்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது.