தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 8.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 7.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7,297 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட 362.55 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (10.9.2025) நடைபெற்ற அரசு விழாவில் 8.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 7.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 7,011 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்பட மொத்தம் 7,297 பயனாளிகளுக்கு 362.55 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் திருப்பெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 14.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், காட்ராம்பாக்கம் ஊராட்சியில் 14.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், பழந்தண்டலம் ஊராட்சியில் 30.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சிறுகளத்தூர் ஊராட்சியில் 14.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், குன்றத்தூரில் அரசு மருத்துமனையில் 60.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துமனை கூடுதல் கட்டடம், திருப்பெரும்புதூர் வட்டம், மொளச்சூர் ஊராட்சியில் 50.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார நிலைய கட்டடம், எழிச்சூர் ஊராட்சியில் 50.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார நிலைய கட்டடம், மாங்காடு (ரகுநாதபுரம்) ஊராட்சியில் 30.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டடம், மாங்காடு (மேல்மாநகர்). ஊராட்சியில் 30.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம், கொளப்பாக்கம் ஊராட்சியில் 21.45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், மாங்காடு நகராட்சியில் 350.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலக கட்டடம், மாங்காடு நகராட்சியில் 30.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டடம், ரகுநாதபுரம் (அசோக் அவென்யூ) பகுதியில் 30.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மைய கட்டடம் என மொத்தம் 8.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், மாங்காடு நகராட்சியில் 85.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டபடவுள்ள புதிய கிளை நூலக கட்டடம், திருமங்கலம் ஊராட்சியில் 286.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பன் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம், சோமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 197.92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகளை கொண்ட கூடுதல் கட்டடம், சிறுகளத்தூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் 74.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகளைக் கொண்ட கூடுதல் கட்டடம், குன்றத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 98.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கூடுதல் கட்டடம் என மொத்தம் 7.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய்த்துறையின் சார்பில் 7,011 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 1 நபருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், சமூக நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 15 பயனாளிகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு டிராக்டர்களையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 3 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவிகள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி, கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி, தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வாகனங்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும், பல்வேறு வங்கிகளின் மூலமாக 121 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதற்காக கடனுதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு பயிர்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு கடனுதவிகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 51 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள், தார்பாய் மற்றும் விதைகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு தோட்டக்கலை உபகரணங்கள் மற்றும் விற்பனை வாகனங்களையும், என மொத்தம் 7,297 பயனாளிகளுக்கு 362.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள், எஸ்.டி.கருணாநிதி, சரஸ்வதி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி , சார் ஆட்சியர் ஆஷிக் அலி, இ.ஆ.ப., உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.