தமிழ்நாடு

வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்," பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழும் 2025-26 ம் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக , இதே 2025-26 ம் நிதியாண்டில், கடந்த 30.04.2025 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories