தமிழ்நாடு

சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !

சென்னையில் நாளை 13 இடங்களில்  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

நாளை (02.09.2025) 13 வார்டுகளில் நடைபெறவுள்ள நிலையில் அது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (02.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்–1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுங்சாலை, சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானம்.

மாதவரம் மண்டலம் (மண்டலம்–3), வார்டு-32ல் சூரப்பட்டு, சண்முகபுரத்தில் உள்ள சமூதாய நலக்கூடம்.

தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்–4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் உள்ள எஸ்.கே.என்.எஸ்.பி.எம்.சி. விவேகானந்தா வித்யாலயா இளநிலை கல்லூரி.

இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-49ல் பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள YMCA கட்டடம்.

திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-77ல் பழைய ஆடு தொட்டி சாலையில் உள்ள வார்டு 77 அலுவலகம்.

அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-89ல் முகப்பேர், முகப்பேர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி திருமண மண்டபம்.

அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள ஜெ ஜெ அரங்கம்.

சென்னையில் நாளை 13 இடங்களில்  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !

தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-124ல் மைலாப்பூர், ஆர்.கே. மட் சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்.

கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-135ல் அசோக் நகர், 1வது அவென்யூவில் உள்ள லக்‌ஷ்மி மஹால்.

ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-166ல் நங்கநல்லூர், எம்ஜிஆர் சாலையில் உள்ள ஹரிஹரன் மஹால்.

அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-180ல் திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருமண மண்டபம்.

பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-191ல் ஜல்லடியன்பேட்டை, பாரதியார் சாலையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கைலாஷ் கார்டன் ஆகிய 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

banner

Related Stories

Related Stories