தமிழ்நாடு

“Timeless TamilNadu” ஆவணப் படத்திற்கு தேசிய விருது! : முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற குழு!

தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட “Timeless TamilNadu” என்ற ஆவணப் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து.

“Timeless TamilNadu” ஆவணப் படத்திற்கு தேசிய விருது! : முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட “Timeless TamilNadu” என்ற ஆவணப் படத்திற்கு 71-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த கலை/பண்பாடுக்கான படத்திற்கான “ராஜத்கமல்” விருது அறிவிக்கப்பட்டதற்காக செலிபிரிட்டி மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த முதன்மை செயல் அலுவலர் பிரசாந்த் சோட்டாணி, நிறுவனர் மற்றும் இயக்குநர் நிஷா சோட்டாணி, இயக்குநர் காமக்யா நாராயன் சிங் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் அவர்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், தமிழ்நாட்டை சர்வதேச அளவில் விரும்பத்தக்க சுற்றுலா மாநிலமாக மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு சுற்றுலாத் துறையின் நிதி உதவியுடன் “Timeless TamilNadu” என்ற ஆவணப்படம் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் காமக்யா நாராயண சிங் அவர்கள் தலைமையில் தயாரிக்கப்பட்டது.

“Timeless TamilNadu” ஆவணப் படத்திற்கு தேசிய விருது! : முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற குழு!

இப்படமானது சென்னை மற்றும் மாமல்லபுரம், தஞ்சாவூர் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் மதுரை, காரைக்குடி மற்றும் இராமேஸ்வரம் போன்ற இடங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் 30 நிமிட காணொலியாக தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் டிராவல் எஃஸ்பி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் 2023-ஆம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் திரைப்படங்கள் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த கலை/பண்பாடுக்கான “Timeless TamilNadu” என்ற ஆவணப்படமாக தேர்வாகி “ராஜத்கமல்” என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் “தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023” முதலமைச்சர் அவர்களால் 26.09.2023 அன்று முதன்முதலாக வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.72 கோடி ஆகவும், 2024-ஆம் ஆண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 30.80 கோடி ஆகவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னோடி சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்ட கோயில்கள், அழகிய மலை சுற்றுலாத் தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வகைப்பட்ட சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இதுபோன்ற பல்வேறு குறும்படங்கள் சுற்றுலாத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா LILLIGDOT சந்தைகள் மற்றும் விளம்பர முகாம்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories