சென்னை புழல் அடுத்த புத்தகரத்தை சேர்ந்தவர் வேணு. இவருக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய பா.ஜ.க நிர்வாகி மின்ட் ரமேஷ் முயற்சித்துள்ளார்.
இது குறித்து வேணு கொடுத்த புகாரின் அடிப்படையில் புழல் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து, ரமேஷை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ரமேஷ் மீது மற்றொரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். வயதான இவரது நிலத்தை ரமேஷ் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து விஜயகுமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜயகுமார் தனது மனைவியுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ரமேஷின் கூட்டாளிகள் அவர்களை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாதவரம் போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பா.ஜ.க கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் நில மோசடி மற்றும் கொலை மிட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.