அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15.6.2025 அன்று வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக நிறுவப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் (16.6.2025) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3,103 மினிபஸ் வழித்தடங்களை தொடங்கி வைக்கும் விதமாக, தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 325 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,25,383 பயனாளிகளுக்கு வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிராம செயலக அலுவலகக் கட்டடங்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கணினி வகுப்பறைக் கட்டடங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், அங்கன்வாடிக் கட்டடங்கள், பால் உற்பத்தியாளர் மையம், மாவட்ட ஆராய்ச்சி நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கிளை நூலகக் கட்டடங்கள், பொது சேவை மையக் கட்டடங்கள், ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள், துணை சுகாதார மையக் கட்டடங்கள், உணவு தானியங்கி கிடங்குகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், சிறு பாலங்கள், உயர்மட்டப் பாலங்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கான இணை இருப்பிடக் கட்டடங்கள், சமுதாய மையக் கட்டடங்கள், பயணியர் நிழற்குடைகள், தார் சாலைகள், ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் மின்கலன் வண்டிகள், ஆய்வகக் கட்டடம், கலையரங்கம் மற்றும் நூலகக் கட்டடங்கள், மாணவ, மாணவியர்கள் விடுதிகள், மீன் விதை உற்பத்தி மையம், பால் குளிர்விப்பான் நிலையம், பூங்கா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்கள் என 166 கோடியே 67 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் 2410 முடிவுற்ற திட்டப் பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் கணபதி அக்ரஹாரத்தில் 30 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார மையம், கும்பகோணம் மாநகராட்சி, மேலக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 22 இலட்சம் ரூபாய் செலவில் ஆய்வகக் கட்டடம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், திருக்கருக்காவூரில் 35 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார மையம், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 கோடி ரூபாய் செலவில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவுக் கட்டடம் மற்றும் 2 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட மருந்தகக் கட்டடம், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 7 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம்;
கலை பண்பாட்டுத் துறை சார்பில் கும்பகோணம் கும்பகோணம் கவின் கலை கல்லூரியில் 15 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கல்லூரிக்கான வகுப்பறை கட்டடங்கள், அரங்கம் மற்றும் நூலகம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அகரப்பேட்டை அரசு மீன் பண்ணையில் 1 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் காக்கைகெண்டை மீன் விதை உற்பத்தி மையம்; பால்வளத்துறை சார்பில் நெய்வாசல் ஊராட்சியில் 34 இலட்சம் ரூபாய் செலவில் 5000 லிட்டர் திறனுடைய மொத்த பால் குளிர்விப்பான் நிலையம்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சோழபுரம் பேரூராட்சி, கிரசன்ட் நகரில் 34 இலட்சம் ரூபாய் செலவில் பூங்கா, அய்யம்பேட்டை பேரூராட்சி, பிரிமியர் ஹைடெக் சிட்டியில் 20 இலட்சம் ரூபாய் செலவில் பூங்கா, திருபுவனம் பேரூராட்சி, மேலவீதியில் 22 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம், ஆடுதுறை பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 34 இலட்சம் ரூபாய் செலவில் கழிவறைகள், ஆடுதுறை பேரூராட்சியில் 48 இலட்சம் ரூபாய் செலவில் ஆடு அடிக்கும் தொட்டி, அம்மாபேட்டை பேரூராட்சியில் 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் தார் சாலை மற்றும் 1 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, மெலட்டூர் பேரூராட்சியில் 1 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவிலும், வல்லம் பேரூராட்சியில் 2 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவிலும் தார் சாலைகள், கும்பகோணம் மண்டலம்-1க்கு 2 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவிலும், மண்டலம்-2க்கு 2 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய அலுவலகக் கட்டடங்கள்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 1 கோடியே 68 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூரில் மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம், தஞ்சாவூரில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட உறைவிந்து குச்சிகளின் சேமிப்பு வங்கி, ஒரத்தநாடு ஊராட்சி, நடுவூரில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் நிலையம் ஆகியவற்றை வலுப்படுத்துதல் பணிகள் பொது நூலகத் துறை சார்பில் 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நாஞ்சிக்கோட்டை கிளை நூலகக் கட்டடம், செங்கமங்கலத்தில் 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும், வீரராகவபுரத்தில் 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்;
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 32 இலட்சம் ரூபாய் செலவிலும், பண்ணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 23 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 32 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவிலும் வகுப்பறை கட்டடங்கள்; அதிராம்பட்டினம் காரையூர் தெருவில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 2 கோடியே 32 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலும், செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 64 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 85 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிலும், செண்டாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 85 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிலும், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 64 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும், வெங்கரைக்கோட்டைகாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 28 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவிலும், வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 85 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஏனாதிக்கரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் 42 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவிலும், வளப்பக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிலும் வகுப்பறை கட்டடங்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திருவிடைமருதூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு 3 கோடியே 72 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் மாணவியர் விடுதிக் கட்டடம், கும்பகோணம் வட்டம், மருதாநல்லூர் பழங்குடியினர் நல மக்களுக்கு 2 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் 50 வீடுகள், ஒட்டங்காடு ஊராட்சி, மதன்பட்டாவூர் பழங்குடியினர் மக்களுக்கு 1 கோடியே 66 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 38 வீடுகள் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் 15 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவிலான பல்வேறு கட்டடங்கள்;
என மொத்தம் 325 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 2461 பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர், கான்கிரீட் நடைபாதை மற்றும் நீர் வசதியுடன் கூடிய தகன கொட்டகைகள், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், சாலை மேம்படுத்தும் பணிகள், பொது விநியோக அங்காடி கட்டடங்கள், நெற்களங்கள் அமைக்கும் பணிகள், அங்கன்வாடிக் கட்டடங்கள், உலர்களங்கள் அமைக்கும் பணிகள், கதிரடிக்கும் களங்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், புதிய விடுதிகள், மீன் விற்பனைக் கூடங்கள் என 236 கோடியே 47 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4113 புதிய திட்டப் பணிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கும்பகோணம் மாநகராட்சியில் தாராசுரம் பகுதியில் 28 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் மேம்படுத்தும் பணிகள், வல்லம் மற்றும் சுவாமிமலை பேரூராட்சிகளில் 3 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள், வேப்பத்தூர் மற்றும் திருபுவனம் பேரூராட்சிகளில் 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடங்கள், பெருமகளூர் பேரூராட்சியில் பெரியகுளம் வடிகாலில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்;
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறுவிளையாட்டு அரங்கங்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவியர் விடுதியில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 9 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், அறுவை சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் மற்றும் மருத்துவ தளங்கள் அமைக்கும் பணிகள்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தஞ்சாவூரில் 6 கோடியே 5 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம்;
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், கரந்தட்டாங்குடியில் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்;
கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 3 கோடியே 33 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கால்நடை கொட்டகை, பசுமாடு கொட்டகை, நடைபாதை மற்றும் மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டி;
என மொத்தம், 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின் விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 5,428 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 4645 பயனாளிகளுக்கு உதவிகள், நகர நிலவரித் திட்டத்தில் 11,353 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்கள், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 2116 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள், கூட்டுறவுத் துறை சார்பில், 2048 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மீன் வளர்ப்புக் கடன், சுய உதவிக்குழு கடன், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 7470 பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடுகள், வீடுகள் பழுது பார்த்தல் மற்றும் மறுகட்டமைப்பு, வீடு மற்றும் கூரை வீடு மற்றும் பழுது நீக்கம் செய்யும் பணிகள், மகளிர் திட்டம் சார்பில், 20,110 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு வங்கி நேரடி கடன், நலிவுநிலை குறைப்பு நிதி, ஓரிட சேவை மைய நிதி, சமுதாய முதலீட்டு நிதி சுழற்சி முறை கடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 1135 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், விலையில்லா தையல் இயந்திரம், பழங்குடியின மக்களுக்கு வீடுகள், ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கு வரவேற்பு பெட்டகங்கள், திருப்பனந்தாள் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு கட்டில்கள்;
தாட்கோ சார்பில், 5334 பயனாளிகளுக்கு ஆழ்துளை கிணறு, தூய்மை பணியாளர் நலவாரிய அட்டைகள், தையல் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பவர் டில்லர், லோடு வாகனங்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 11,121 பயனாளிகளுக்கு விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள், விலையில்லா எல்.பி.ஜி. தேய்ப்பு பெட்டிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 25,000 பயனாளிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு மானியம், விவசாய காப்பீட்டுக்காக விடுவிக்கப்படும் தொகை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 100 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரமாக்கல் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில், 1,100 பயனாளிகளுக்கு குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்குகள், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு பாசனம், தேனீ பெட்டிகள், நடமாடும் காய்கறி வண்டிகள், நிரந்தர மண்புழு உரக்கூடங்கள், நீர் சேமிப்பு கட்டமைப்புகள், குறைந்த விலை வெங்காய சேமிப்புக் கிடங்கு;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 1,229 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தங்க நாணயங்கள், காது கருவிகள், தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 8,460 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள், மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை சார்பில் 5,700 பயனாளிகளுக்கு மீனவ மகளிர் மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள், கடல்பாசி வளர்ப்பு, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு நாரிழைபடகு மற்றும் இயந்திரம் வழங்குதல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை சார்பில் 1,858 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை, இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகை, என பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பில் 2,25,383 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.