தமிழ்நாடு

ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி சரண்டர் செய்யப்படாது! : கண்டனத்திற்கு அடிபணிந்த தெற்கு ரயில்வே!

தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சி திட்டங்கள் திரும்பப்பெறப்படுவதாக தெரிவித்ததற்கு, மாநில அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அறிவிப்பை திரும்பப்பெற்றது தெற்கு ரயில்வே.

ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி சரண்டர் செய்யப்படாது!  : கண்டனத்திற்கு அடிபணிந்த தெற்கு ரயில்வே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையிட்டுள்ளது என்ற கண்டனம் மாநில அளவில் எழுந்ததையடுத்து, தனது நிலையை திருத்திக் கொண்டது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை சரண்டர் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தை, சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்திருந்தோம்.

தெற்கு ரயில்வே அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் பொதுவான திட்ட கொள்கையை விளக்கி அறிக்கை வெளியிட்டது. அதனையும் நான் விமர்சித்து இருந்தேன். இப்போது தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டாவது அறிக்கையை (4.6.25) வெளியிட்டிருக்கிறார்.

ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி சரண்டர் செய்யப்படாது!  : கண்டனத்திற்கு அடிபணிந்த தெற்கு ரயில்வே!

அதில் ஊடகங்கள் அறியாமையால் நிதி ஆண்டுக்கு சரண்டர் என்று கூறுகிறார்கள். இந்த காலாண்டு பற்றி தான் தெற்கு ரயில்வே கூறியது. மற்ற காலாண்டுகளில் இவை செயல்படுத்தப்படும் என்று சமாளித்துள்ளார். ஆனால் தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தில் 2025-26 நிதியாண்டுக்கு இந்த நிதியை பயன்படுத்த முடியாது என்றும் வேறு ரயில்வேக்கு அந்த நிதியை பயன்படுத்தலாம் என்றும் தான் உள்ளது.

நாங்கள் சொன்னது அறியாமையால் அல்ல. தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தில் இருந்ததைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம். தெற்கு ரயில்வேயின் அதிகாரி கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார். ரயில்வே அமைச்சகமும் தமிழ்நாடு மற்றும் கேரள வளர்ச்சி திட்டங்களுக்கு 2025-26க்கு ஒரிஜினல் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட படி திட்டமிடலும் செயல்பாடும் இருக்கும் என்று முடிவு செய்திருப்பதாக இப்பொழுது கூறியிருக்கிறது.

இது எங்கள் விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த முடிவை நான் வரவேற்பதோடு இது வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த நிதியை நடைமுறையில் செலவிடவும் தெற்கு ரயில்வேயை வற்புறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories