தமிழ்நாடு

”மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஐந்தே மாதத்தில் நீதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஐந்தே மாதத்தில் நீதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!

காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories