தமிழ்நாடு

”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது” : ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்!

கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது என தொல்லியர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது” : ஒன்றிய அரசுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2024 ஆண்டு ஜூன் 18ம் நாள் தொடங்கியது. இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பாசிகள், கண்ணாடி மணிகள், தந்த ஆட்டக்காய், சுடுமண் குழாய், பானைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அகழாய்வு குழிகளில் உள்ள பானைகள், பானைஓடுகள், சரிந்த கூரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கீழடி அகழாய்வு களத்தில் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு அசாம் மாநிலத்திற்கு இடம்மாற்றியது. இருந்தும் கீழடி அகழாய்வு குறித்து 2023 ஆம்ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

இதற்கு குடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு அமர்நாத் இராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். அதில், ”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு. 800- கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories