சமீப காலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதன் நிலையில் இதற்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மறுப்பு தெரிவித்துள்ளார்
இது குறித்து கூறியுள்ள அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்திருந்தார். மேலும், வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவல் தடுப்பதற்கான அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்
உலக சுகாதார துறையும் ஒன்றிய அரசும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று கூறியது தவிர மற்ற எந்த விவரங்களையும் கூறவில்லை என்று கூறிய அவர் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகள் தவறானவை எனவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை எனவும் தெரிவித்தார்
அதோடு பொது இடங்களில் முகக்கவசம் தமிழ்நாட்டில் இனி அவசியம் என்று பரவி வரக்கூடிய செய்தி தவறானவை எனவும் சுகாதாரத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மைத்தன்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.