தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” : ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாட்டிற்கு ஏன் கல்விநிதி ஒதுக்கவில்லை? என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” : ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. இது குறித்து கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்விற்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 % தொகையை மத்திய அரசு 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும்.

மத்திய அரசு, கடந்த 2021ஆம் கல்வியாண்டு முதல் 2021 ஆம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்றும் 100% தொகையை மாநில அரசு தான் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஒன்றிய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குபதில் அளித்த ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர், ”அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படவில்லை” என தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள், என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என கேட்டபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ”ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories