தமிழ்நாடு

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

காவல்துறை சார்பில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

2021-22ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணை அடிப்படையில் காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 41 காவல் துணை கண்காணிப்பாளர், 444 காவல் உதவி ஆய்வாளர்கள், 16,199 நிலை-II காவலர்கள், அமைச்சுப் பணியில் 472 உதவியாளர்கள், 215 இளநிலை உதவியாளர்கள், 23 தட்டச்சர்கள், 42 சுருக்கெழுத்து - தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 17,436 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories