சென்னையில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்லும் ஏர் இந்தியா, இரவு 8.35 மணிக்கு கொச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 9.20 மணிக்கு புனே செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 9.45 மணிக்கு, டெல்லி செல்லும் ஏர் இந்தியா, இரவு 9.55 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதை போல் மாலை 4.35 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா, இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து வரும் ஏர் இந்தியா, இரவு 9.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 11.50 மணிக்கு கொச்சியிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், நள்ளிரவு 12.35 மணிக்கு புனேயில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 5 வருகை விமானங்களும் இன்று திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இன்று 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 10 ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி கொண்டு இருக்கின்றனர்.
இந்த விமானங்கள் திடீர் ரத்துக்கு என்ன காரணம்? என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விமானங்கள், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.