தமிழ்நாடு

நீங்க யாரு?.. ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்!

உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை, அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.

நீங்க யாரு?.. ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, சதுரங்க ஆட்டத்தை ஆடிவருகிறது ஒன்றிய அரசு. இவர்களது கை அசைவுக்கு ஏற்ப ஆளுநர்களும், எதிர்க்கட்சி அரசுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகிறார். மேலும் அரசின் செயல்பாடுகளில் நேரடியாக குறுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், அதை கிடப்பில் வைப்பதையே ஆளுநர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடித்தனத்தை எதிர்த்துதான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிடப்பில் வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. இதில் மிகமுக்கியமான மசோதா, ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக்குவதாகும்.

இந்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து, முதலமைச்சர் பல்கலைக்கழக வேந்தராகுகிறார். ஆளுநர் இனி வேந்தர் இல்லை என்பதுதான் அர்த்தம். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக துணை வேந்தர்கள் மாநாட்டினை உதகையில் இன்று ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இந்த மாநாட்டினை துணை குடியரசு ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் மாநாட்டினை ஒட்டுமொத்தமாக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். சில தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். இந்த புறக்கணிப்பின் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு துணை வேந்தர்கள் தக்க பாடத்தை புகட்டி இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories