தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை மீதான விவாதம்... பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேசியது என்ன? - முழு விவரம்!

போக்குவரத்துத் துறை மீதான விவாதம்... பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேசியது என்ன? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறைகள் மீதான கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தும், புதிய அறிவிப்புகள் வெளியிட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் போக்குவரத்துத்துறை மீதான விவாதத்தின்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது வருமாறு :

பேரவைத் தலைவர் அவர்களே, தில்லி எலிக்கு வான் பருந்து; தெற்குத் திசையின் படை மருந்து; கல்லாதோர்க்கு நன்மருந்து; கற்றவர்க்கு வண்ணச் சிந்து பெரியார் என்றார் பாரதிதாசன். அந்தப் பெரியாருக்கு புகழ் வணக்கம். எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்; நீங்கள் தாங்கித் தாங்கி அந்த வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் பேரறிஞர் அண்ணா. ஒன்றிய அரசு, தமிழக அரசின்மீது தாக்குதல் தொடுத்து தொடுத்து நமது முதல்வர் அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த தீர்க்கதரிசி அண்ணாவிற்கு புகழ் வணக்கம். 13 வயதில் மொழி காக்க புறப்பட்டு, மாநில சுயாட்சிக்கு வலுவான தளமிட்டு, நவீன தமிழகத்தைக் கட்டமைத்து, வாழும்வரை தம் எழுத்துகளால் தமிழைச் செறிவூட்டி, இனமான உணர்வூட்டிய எம் தலைவர் கலைஞருக்கு புகழ் வணக்கம்.

காஷ்மீர் உரிமைக்கான முதல் குரல்; விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு குரல்; பிரிவினையைத் தூண்டிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர் குரல்; ஏஜெண்ட் ஆளுநரின் அசட்டுத்தனத்திற்கு சம்மட்டி அடி; ஆணவ அதிகார ஒன்றிய அரசிற்கு கடிவாளப் பிடி; மொத்தத்தில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் தலைமைக் குரல் எம் மக்கள் முதல்வர் தளபதி அவர்களுக்கு கம்பீர வணக்கம்.

நீட் எதிர்ப்பில் முதல் சிப்பாய்; ஒன்றிய அரசிற்கு எதிரான கள வீரன்; இளைஞர் படைக்கு தெளிவூட்டும் பாசறை ஆசான்; விளையாட்டு வீரர்களுக்கு வாழ்க்கைப் பாலம்; தமிழக மக்களின் செல்லப் பிள்ளை எங்கள் இளைஞரணிச் செயலாளர் துணை முதல்வர் அவர்களுக்கு மகிழ் வணக்கம்.

பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மூத்த அமைச்சர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் துறை குறித்த ஒரு வரலாற்றுச் செய்தியை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 1955 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இதுபோன்ற பொதுப் போக்குவரத்தில் ரோசா பார்க் என்ற பெண்மணி பேருந்தில் ஒருநாள் பயணம் செய்தபோது, அவர் அமர்ந்திருந்த இருக்கையை விட்டுக்கொடுக்குமாறு நடத்துநர் சொல்கிறார். அந்தப் பெண்மணி கருப்புப் பெண்மணி. காரணம் கேட்டபோது, ஒரு வெள்ளையர் வந்து நிற்கிறார், அவருக்கு அந்த இருக்கையை விட்டுத்தர வேண்டுமென்று சொல்கிறார். அந்தப் பெண்மணி மறுக்கிறார். மறுத்த அந்த பெண்மணிமீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார். ஓர் இருக்கையில் அமர்வதற்குக்கூட அந்த கருப்பினப் பெண்மணிக்கு உரிமை இல்லை என்று மறுக்கப்பட்ட நேரத்தில், அதையொட்டி ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்க அலபாமா மாநிலம் முழுவதும் அந்தப் பெரும் போராட்டத்திற்கு வலு சேர்ந்து, அந்தப் போராட்டத்தின் இறுதியில், அவரும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று  நீதிமன்றத் தீர்ப்பு வருகிறது. பொதுப் போக்குவரத்தின் இந்த மிகப் பெரும் வரலாறு அமெரிக்காவில் துவங்குவதற்கு முன்பே, அதற்கு கால் நூற்றாண்டிற்கும் முன்பாகவே தமிழகத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றது.

தமிழகத்திலும் அதேபோன்று ஒரு பேருந்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உட்கார்ந்து பயணம் செய்தார். அன்றைக்கு இருந்தவை அனைத்தும் தனியார் பேருந்துகள். அந்த தனியார் பேருந்து முதலாளிகளின் உத்தரவுப்படி, அவ்வாறு உட்கார்ந்து பயணம் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். அவ்வாறு உட்கார்ந்து பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால், அந்தப் பேருந்தின் உரிமம் பறிக்கப்படும் என்று அன்றைக்கு ஒரு தலைவர் சொன்னார். அவர் W.P.A. சௌந்தரபாண்டியன் அவர்கள். அவர்தான் நீதிக் கட்சியின் தலைவர். அந்தத் நீதிக் கட்சியின் தலைவர் W.P.A. சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்குத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அறிவிப்புக் கொடுத்தார்கள். அந்தப் பொதுப் போக்குவரத்தில் அன்றைக்கு எல்லோரும் அமர்ந்து சரிசமமாக பயணிக்க வேண்டுமென்ற அந்த நீதிக் கட்சியின் குரலாகத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்குவதற்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறு உத்தரவிட்ட நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து, அந்தப் பணியை முடுக்கி, முதலமைச்சரான பிறகு முழுமையாக நாட்டுடைமையாக்கி, தற்போது இவ்வளவு பெரிய போக்குவரத்து நிறுவனம் அமைவதற்குக் காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்படி அமைந்த காரணத்தினால்தான், தமிழகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்குவதற்கு ஒரு பெரும் சக்தியாக இந்தப் போக்குவரத்துத் துறை அமைந்தது. இந்தப் போக்குவரத்துத் துறை இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்த காரணத்தினால்தான், தமிழகத்தில் கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் ஒரு சமச்சீர் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 1970-ல் முதலமைச்சராக இருந்த நேரத்தில், எவ்வாறு எல்லா கிராமங்களும் மின் வசதி பெறுவதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவதற்கும் காரணமாக இருந்தாரோ, அவ்வாறு எல்லா கிராமங்களையும் சாலைகளால் இணைத்தார்.

அந்தச் சாலைகளால் இணைத்தால் மட்டும் போதாது. அந்தச் சாலைகளுக்குப் பேருந்து வசதி கொடுத்தால்தான் கிராமம், நகரம் என்கின்ற பாகுபாடு மறையும் என்று இந்தப் பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, ஒரு மிகப் பெரிய நிறுவனமாக கட்டமைத்த காரணத்தினால்தான் தமிழகம் இன்றைக்கு அந்தச் சமச்சீர் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. வெறும் போக்குவரத்து மட்டும் சமச்சீர் வளர்ச்சியைக் கொண்டுவந்துவிட முடியுமா என்று பலரும் கேட்பார்கள். அப்படி அவர் கொண்டு வந்த காரணத்தினால்தான் கிராமங்களில் வீதிகளில், வீடுகளில் முடங்கிக்கிடந்த பொதுமக்கள் அந்தப் போக்குவரத்தின் மூலமாக வெளியே வந்து கல்வி கற்றார்கள்; சிறு வேலைகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள். சிறு வியாபாரம் செய்கின்ற வாய்ப்பைப் பெற்றார்கள். அதன் மூலமாகத்தான் இந்த வளர்ச்சி கிடைத்தது.  

போக்குவரத்துத் துறை மீதான விவாதம்... பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேசியது என்ன? - முழு விவரம்!

சமீபத்திலேகூட அண்ணா நூற்றாண்டு நூலகத்திலே போதுமான போக்குவரத்து வசதிகளை இன்னும் கூடுதலாக்க வேண்டுமென்று நம்முடைய மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் மரியாதைக்குரிய மரு. ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் என்னிடத்திலே தெரிவித்தார். அவர் அங்கே சென்றிருந்த நேரத்தில் பார்த்தபோது—அதற்குப் பிறகு 44 service-கள் கூடுதலாக்கப்பட்டது. அப்படிக் கூடுதலாக்கப்பட்ட காரணத்தினால் ஒவ்வொரு நாளும் 1,800 பேர் வந்து கொண்டிருந்தார்கள் என்ற நிலை மாறி, இன்றைக்கு இரண்டு மடங்காக அங்கே வாசகர்கள் வருகிறார்கள் என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்திலே பணியில் இருக்கின்ற அதிகாரிகள் நம்முடைய போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். இவ்வளவு முன்னேறிய சூழல் வந்தபிறகும், போக்குவரத்து வசதிகள் பெருகிய பிறகும், அந்தப் பொதுப் போக்குவரத்தை இன்னும் கூடுதலாக்குகின்றபோது எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கிறது என்பதனை இன்றைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தினுடைய உதாரணம் நமக்குத் தெரிவிக்கிறது. எனவே, ஒரு பெரிய மாநகரத்திலேயே இத்தகைய வசதி கிடைக்கின்றபோது இவ்வளவு வசதியைப் பயன்படுத்தி மக்கள் வருகிறார்கள் என்றால், கிராமப்புறத்திற்கும் அந்த வசதிகளை தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்த காரணத்தினால்தான் ஒரு மாபெரும் புரட்சி இன்றைக்குத் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாபெரும் புரட்சியை நம்முடைய முதல்வர் அவர்கள் விடியல் பயணத்தின் மூலமாக இன்றைக்கு இன்னும் கூர்மை தீட்டியிருக்கின்றார். இந்த விடியல் பயணம் வழங்குகின்ற நேரத்தில் 2021 மே மாதம் ஆட்சி அமைந்த 7 ஆம் தேதி அவர் அறிவித்து, இன்றைக்கு 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையிலே, இந்த விடியல் பயணம் திட்டத்தின்கீழ் பயணம் செய்தவர்கள் 675 கோடியே 98 இலட்சம் பேர். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத எண்ணிக்கையில் இன்றைக்குப் பெண்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயணம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய வாழ்க்கையிலே மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மாநில திட்டக் குழு ஆய்வு நடத்தி, கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு பெண்மணிக்கும் 888 ரூபாய் இந்தத் திட்டத்தின் மூலமாக மிச்சமாகிறது, அந்தத் தொகை அவர்களுடைய குடும்பத்தினுடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறது என்று சொன்னார்கள். இப்போது கிட்டத்தட்ட 1,200 ரூபாய் அவர்களுக்கு மிச்சமாகிறது என்று ஒரு தனியார் நிறுவனத்தின் கணிப்பு மூலமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு முதல்வர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்குகின்ற நிதி உயர்ந்து கொண்டே செல்கிறது. 2021-2022 ஆம் ஆண்டு 1,216 கோடி ரூபாயை ஒதுக்கினார். 2022-2023 ஆம் ஆண்டு 2,728 கோடி ரூபாயை ஒதுக்கினார். 2023-2024 ஆம் ஆண்டு 3,000 கோடி ரூபாயை ஒதுக்கினார். 2024-2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3,215 கோடி ரூபாய் நிதி இதற்காக வந்துள்ளது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வருகின்ற நிதியாண்டிற்கு 3,600 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றார். ஒதுக்குகின்ற ஒவ்வொரு தொகையும் தமிழ்நாட்டுப் பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொகையாக இருக்கிறது. 

அதேபோல, போக்குவரத்துத் துறையினுடைய செயல்பாடு சிறப்பாக அமைவதற்கு மிகப்பெரிய ஆதாரமாக இந்தத் தொகைதான் அமைந்திருக்கிறது. எனவே, முதலமைச்சர் அவர்களுக்கு இந்தத் துறை சார்பாக இந்த நேரத்தில் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, பாழ்பட்டுக் கிடந்த, சீர்கெட்டுக் கிடந்த இந்தத் துறையை சீரமைப்பதற்கு புதிய பேருந்துகள் வாங்குவதற்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். 2022-2023 ஆம் ஆண்டு 420 கோடி ரூபாயை ஒதுக்கி ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிட்டார்கள். ஆயிரம் பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. 2023-2024 ஆம் ஆண்டு 446 கோடி ரூபாயை ஒதுக்கி ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிட்டார்கள். ஆயிரம் பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. 2024-2025 ஆம் ஆண்டு 1,535.89 கோடி ரூபாயை ஒதுக்கி 3 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிட்டார்கள். அதிலே 1,210 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

அதேபோல, ஜெர்மன் வங்கியான KfW நிதியுதவிடன் 552 தாழ்தளப் பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிடப்பட்டு, அந்த 552 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. KfW மூலமாக 1,214 சாதாரண டீசல் பேருந்துகள் வாங்குவதற்கு
7-10-2024 அன்று tender விடப்பட்டு, விரைவிலே அந்தப் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அதேபோல, KfW வங்கியின் மூலமாக 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு 11-10-2024 அன்று tender விடப்பட்டு அந்தப் பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், GCC method அடிப்படையில் பேருந்துகள் வாங்குவதற்கு ஆணையிடப்பட்டு, 26-2-2024 அன்று 635 பேருந்துகள் முதற்கட்டமாக வாங்கப்பட்டன. வருகின்ற ஜூலை மாதத்தில் அந்தப் பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அடுத்து, 11-2-2025 அன்று 600 பேருந்துகளுக்கு tender விடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த 2025-2026 ஆம் ஆண்டிற்கு 3,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு முதல்வர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அதுவும் தற்போது tender நிலையில் இருக்கிறது. விரைவில் அப்பணி முடிவுற்று பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இவ்வாறு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை மொத்தம், 3,778 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. மீதி 8,129 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளன. 

அதுமட்டுமின்றி, அடித்தட்டம் சரியாக இருக்கின்ற, நல்ல நிலையில் இயங்கக்கூடிய பேருந்துகளை அவற்றின் கூடுகளை மறுசீரமைப்புசெய்து கட்டுவதற்கு 2022-2023 ஆம் ஆண்டில் 130 கோடி ரூபாயை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதில் 1,000 பேருந்துகள் கூடு கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. 2023-2024 ஆம் ஆண்டில் 500 பேருந்துகளுக்கு கூடு கட்டுவதற்கு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அந்தப் பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த 2025-2026 ஆம் ஆண்டில் 754 புதிய பேருந்துகளுக்கு கூடு கட்டுவதற்கு tender விடப்பட்டிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்கு CNG என்கின்ற இயற்கை வாயு அடிப்படையிலான புதிய பேருந்துகளை இயக்குவதற்கும் முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 746 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு tender விடப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே இயங்குகின்ற பேருந்துகளில் 1,000 பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்றி இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்துத் துறை மீதான விவாதம்... பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேசியது என்ன? - முழு விவரம்!

இவ்வாறு புதிய பேருந்துகளை வாங்குகின்ற இந்த நேரத்தில், புதிய பணியாளர்களைப் பணிக்கு எடுக்க வேண்டுமென்று, அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இங்கே பேசிய உறுப்பினர் P.R.G. அருண்குமார் மற்றும் நண்பர்கள் அதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள். முதற்கட்டமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 பேர் கடந்த ஆண்டே பணிக்கு எடுக்கப்பட்டுவிட்டார்கள். அதேபோன்று, மற்ற 7 போக்குவரத்துக் கழகங்களுக்கும் 3,275 நபர்களை பணிக்கு எடுப்பதற்கு
online-ல் விண்ணப்பம் பெறுகின்ற பணி துவங்கப்பட்டு, இன்று அந்தப் பணி முடிகிறது. 

அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை எடுக்கின்ற நேரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துனராக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த முறையை மாற்ற வேண்டுமென்று திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.சந்திரன் அவர்கள் கோரிக்கை வைத்தார். இவ்வாறு பணிக்கு ஆட்களை எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவதற்கு நான் இந்த நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறேன். ஓட்டுநர் தனியாக, நடத்துநர் தனியாக என்று எடுக்கின்ற சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுகின்ற ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீரென்று பணிக்கு வராமல் போய்விட்டால் ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் 5 ஓட்டுநர்கள் வராவிட்டால், 5 பேருந்துகளை இயக்க முடியாத நிலையும், 5 நடத்துநர்களுக்கு பணி கொடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான், இந்த முறை மட்டும், ஒரு மாற்று ஏற்பாடாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என்ற முறையில் எடுக்கப்படுகிறது.  ஏற்கெனவே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்த அடிப்படையில்தான் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள். காரணம், நீண்ட தூரப் பயணத்தில் பாதி தொலைவிற்கு ஓர் ஓட்டுநர் ஓட்டியபிறகு, அடுத்து மறு ஓட்டுநர் மாற்றி ஓட்டுவார். இப்பொழுது மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கும் அவ்வாறு எடுக்கின்ற காரணம், 5 ஓட்டுநர்கள் வராவிட்டால், ஓட்டுநர்-நடத்துநராக பணிக்கு எடுக்கப்படும் இவர்கள் அந்த இடங்களில் ஓட்டுநராகப் பணியாற்றுவார்கள். நடத்துநர் வராவிட்டால், அவர்களுக்கு நடத்துநருக்கான பணியை மாற்றிக் கொடுத்து, பணியாற்றுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றபோது, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அனைத்துப் பேருந்துகளையும் இயக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை, ஓட்டுநர்-நடத்துனர் பணியிடங்களுக்கு எடுக்கின்றபொழுது தனித்தனியாகவே எடுக்கப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதேபோல, வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென்று நம்முடைய பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் பல நேரங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றபின்புதான், பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டு, அதற்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, இதுவரை 1,024 நபர்களுக்கு பணியாணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  அதில் 76 பேர் பெண் நடத்துனர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு முக்கியமான செய்தி. பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களில், பெண்கள் நடத்துனர் பணிக்கு வருகின்றபோது, 160 centimeter உயரம் இருந்தால்தான் அவர்களுக்குப் பணி வழங்கப்பட்டது. பல பெண்கள் உயரம் குறைவாக இருக்கின்ற காரணத்தால், அந்தப் பணிகளை அவர்களுக்கு வழங்க முடியாத நிலை இருந்தது. எனவே, இந்தச் செய்தியை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன், அவர் அதனைக் கருணைகூர்ந்து கவனித்து, உடனடியாக 10 cm உயரம் குறைவாக இருந்தாலும், அதாவது 150 cm உயரம் இருந்தாலும் அவர்களுக்குப் பணி வழங்கலாம் என்ற வாய்ப்பை வழங்கிய காரணத்தினால், 67 பெண் நடத்துனர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 67 குடும்பங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

இந்த ஆட்சி அமைந்த பிறகு இந்தப் பணிகளெல்லாம் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. 

அதேபோன்று, சென்னை மாநகரத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றபோது, ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழும். அந்தப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் ஏன் இயக்க வேண்டும் என்று உறுப்பினர் அருண்குமார் அவர்கள் கேட்டார்கள். நான் அதற்கான காரணத்தையும் கூறினேன். நம்மிடத்தில் டீசல் பேருந்துகளைப் பராமரிப்பதற்கான பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். மின்சாரப் பேருந்துகளை வாங்குகின்றபோது, அதைப் பராமரிப்பதற்கான பணியாளர்கள் நம்மிடம் இல்லாத காரணத்தினால், அவற்றை எந்த நிறுவனம் தயாரிக்கின்றதோ, அந்த நிறுவனமே அதன் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற டெண்டர் ஒப்பந்த அடிப்படையில்தான் இப்பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். மின்சாரப் பேருந்துகளின் விலையும் கூடுதலாக இருக்கிறது. அவற்றில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, அதிக செலவினம் வரும் என்ற காரணத்தினால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அவரே குறிப்பிட்டதைப்போல, சென்னை மாநகரத்தில் பெரும்பாக்கம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி மற்றும் சென்ட்ரல் ஆகிய பணிமனைகளிலிருந்து முதற்கட்டமாக 600 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதற்கு அடுத்தகட்டமாக 650 பேருந்துகள் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. 

அதேபோன்று, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிக்கப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடிக்காமல் நிறுத்திவிட்டுப் போனார்கள். மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை அன்றைக்கிருந்த அ.தி.மு.க. அரசு நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் முடிக்காமல் சென்றுவிட்டது. முதல்வர் அவர்களுடைய தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அண்ணன் ராஜகண்ணப்பன் அவர்கள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியதற்குப் பிறகு நான் மூன்றுமுறை பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்தோம். ஏதோ யாருக்கும் தெரியாமல் மூன்று ஆண்டுகளை நான்கு ஆண்டுகளாக அறிவித்தோம் என்று அவர் கூறினார். பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் மூன்று ஆண்டுகளை நான்கு ஆண்டுகள் என மாற்றியமைத்திருக்கிறோம். 

இன்னும் சொல்லப்போனால், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட pay matrix என்ற முறை உங்களுடைய ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்டது. சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்கப்பட்டது. மீண்டும் சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் காலவரன்முறை வித்தியாசத்தின்படி சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் அவர்கள் அதை நடைமுறைக்குக் கொண்டுவரக் கூறினார்கள். அதன் காரணமாக, ஒவ்வொரு மாதமும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்ற சூழல் வந்தது. இருப்பினும், தொழிலாளர்களுடைய நலன் கருதி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியது. அடுத்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கான பணிகள் துவங்கப்பட்டு, ஒருகட்ட பேச்சுவார்த்தை அதிகாரிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்பட்டபோது, முன்னாள் பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய மன்மோகன் சிங் அவர்கள் மறைவுற்ற காரணத்தால், அப்பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் கடந்த மாதம் நான் கலந்து கொண்டு நடத்தியிருக்கிறேன். தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற காரணத்தால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவுற்ற பிறகு நடத்தலாம் என்று தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்திருக்கின்றோம். எனவே, இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவுற்ற பிறகு, அந்தப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதை இந்தநேரத்தில் அன்போடு உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, முதலமைச்சர் அவர்களுடைய மிக முக்கியமான திட்டத்தை இந்த அவைக்குத் தெரியப்படுத்த நான் விரும்புகிறேன். முத்தமிழறிஞர் அவர்கள் தலைவர் அவர்கள், பெரிய பேருந்துகள் இயக்க முடியாத சிறிய, குறுகிய சாலைகள் கொண்ட குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை வழங்க வேண்டும் என்று மினி பேருந்து திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த மினி பேருந்து திட்டம் கடந்தகால ஆட்சியாளர்களால் பாராமுகமாக கண்டுகொள்ளாமல் இருந்த காரணத்தால் மினி பேருந்து உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார்கள். எனவே, மினி பேருந்து உரிமையாளர்கள் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை வைத்தார்கள். அந்தக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, இன்னும் கூடுதல் சேவை தேவைப்படுகின்ற, 100 குடியிருப்புகளுக்கும் குறைவாக இருக்கின்ற குக்கிராமங்களுக்கு பேருந்து சேவை வழங்குவதற்கு முதலமைச்சர் அவர்கள் அந்த மினி பேருந்து திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, புதிய மினி பேருந்து திட்டம் 2024 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அதிகபட்ச வழித்தட தூரம் 25 கி.மீ. ஆக நீட்டிப்பு வழங்கப்படவிருக்கிறது. அவற்றில், 65 சதவிகிதம் பேருந்து வசதி இல்லாத, சேவை வழங்கப்படாத சாலையாக இருக்க வேண்டும் என்றும், 35 சதவிகிதம் பேருந்துகள் இயங்குகின்ற சேவை உள்ள பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சேருமிடம் 1 கிலோ மீட்டருக்குள்ளாக நூலகங்களோ, மருத்துவமனைகளோ, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமோ, வட்டாட்சியர் அலுவலகமோ, உயர்நிலைப் பள்ளிகளோ இருந்தால், அந்த தூரத்தையும் நீட்டித்து, போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். இந்த அடிப்படையில், திட்ட வரைவு வெளியிடப்பட்டு, மினி பேருந்து திட்டம் 2024-ல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கான அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, 1,842 பேர் புதிதாக மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பித்தார்கள்; அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே 2,053 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 1,842 புதிய வழித்தடங்களில் முதற்கட்டமாக முதலமைச்சர் அவர்கள் மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொடியசைத்து அந்த மினி பேருந்து புதிய திட்டத்தையும் தொடங்கவிருக்கிறார்கள். எனவே, இத்தகைய சிறப்புகளோடு இயங்கி வருகின்ற இந்தத் துறையின் செயல்களை பாராட்டி, ஒன்றிய அரசின் மூலமாக மாநில சாலை போக்குவரத்துகளின் கூட்டமைப்பு மூலமாக சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டன.  இங்கே பேசுகின்றபோது, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் S. ராஜகுமார் அவர்களும் அதனை குறிப்பிட்டார்கள். இந்தியாவில் 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. அந்த 70 மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கான விருதுகளில் 19 விருதுகளை நம்முடைய போக்குவரத்து நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன. இது கிட்டத்தட்ட 28 சதவிகித விருதுகளாகும். இன்னும் சொல்ல வேண்டுமானால், technical ஆக வழங்கப்படுகின்ற விருதுகளில், 70 சதவிகித விருதுகளை நம்முடைய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றிருக்கின்றன. இதில் மாநகர போக்குவரத்துக் கழகம் சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கான விருது, நிதி நடைமுறைக்கான விருது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பணியாளர் செயல்திறனுக்கான முதல் இடம், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முதல் இடம், வாகன பயன்பாட்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. அதேபோல், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் எரிபொருள் செயல்திறனுக்கான விருதில் இரண்டாம் இடத்தையும், சேலம் போக்குவரத்துக் கழகம் எரிபொருள் செயல்திறனுக்கான விருதில் முதல் பரிசையும், சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கு புறநகர் பிரிவு முதல் இடத்தையும், நகர்புற பிரிவு ஒரு பரிசையும், வாகன பயன்பாட்டிற்கான விருதில் முதல் இடத்தையும் பெற்றிருக்கிறது. அதேபோல், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் எரிபொருள் செயல்திறனுக்கான புறநகர் பிரிவில் முதல் பரிசையும், நகர்புறத்திலேயும் முதல் பரிசு, அதேபோல் டயர் செயல்திறனுக்கான புறநகர் பிரிவில் இரண்டாம் பரிசு, நகர்புற பிரிவில் முதல் பரிசு, வாகன பயன்பாட்டிற்கு முதல் பரிசு என்று பெற்றிருக்கிறது. அதேபோல், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம் டயர் செயல்திறனுக்கான புறநகர் பிரிவில் முதல் பரிசு, நகர்ப்புறத்திற்கு இரண்டாம் பரிசும், எரிபொருள் செயல்திறனுக்கான விருதில் நகர்புறப் பிரிவில் இரண்டாம் பரிசு, வாகன பயன்பாட்டிற்கான விருதில் இரண்டாம் பரிசு என்று பெற்றிருக்கிறது. இந்த விருதுகளெல்லாம் இன்றைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடைய செயல்பாட்டிற்காகக் கிடைத்திருக்கின்ற விருதகள். ஓராண்டு விருது பெற்றுவிட்டால் போதுமா என்று நீங்கள் கேட்கலாம். அந்த ஓராண்டு விருதைத் தாண்டி, நம்முடைய அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு எப்படி செயல்படுகின்றது என்பதற்குக் கிடைத்த ஓர் அத்தாட்சிதான் இந்தப் புத்தகம். பேரவைத் தலைவரிடத்தில் ஏற்கெனவே அனுமதி பெற்றுத்தான் உங்களிடம் காண்பிக்கின்றேன். யாருக்காவது வேண்டுமென்றால், இதனுடைய பிரதியைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ASRTU-Association of State Road Transport Undertakings. அதாவது இந்தியாவில் இருக்கிற அரசுப் போக்குவரத்துக்கான இந்தக் கூட்டமைப்பு மூலமாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடைய செயல்பாடுகளை பார்த்து, அவர்கள் இரண்டு வெளி மாநில அலுவலர்களை இங்கே அனுப்பி, நம்முடைய அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடைய பல்வேறு பணிமனைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகம், இந்தியாவிலிருக்கிற எல்லா போக்குவரத்து நிறுவனங்களுக்கும் ஒரு கையேடாக, வழிகாட்டிப் புத்தகமாக அவர்கள் வழங்கவிருக்கிறார்கள். இது நாம் தயாரித்தது அல்ல. அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் இணைந்து அந்தக் கூட்டமைப்பு தயாரித்திருக்கின்ற புத்தகம். ஒவ்வொரு பணிமனையிலும் எப்படி tyre பராமரிக்கப்படுகிறது? எப்படி பேருந்து பராமரிக்கப்படுகிறது? எந்தவிதத்தில் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்? என்பதையெல்லாம் அவற்றின் புகைப்படங்களோடு அவர்கள் வெளியிட்டு, ஒரு பெருமையை நம்முடைய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றால், நம்முடைய போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகின்ற துறைச் செயலாளர், மேலாண் இயக்குநர்கள், அங்கேயிருக்கின்ற பொறியாளர்கள், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர் என்று அத்தனை பேரும் ஒரு கூட்டு முயற்சியாக ஒரு மிகச் சிறந்த சேவையை தமிழ்நாட்டில் வழங்குகின்ற காரணத்தினால்தான், இந்தச் சேவையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதற்கு இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இத்தகைய சிறப்போடு நம்முடைய போக்குவரத்துக் கழகங்கள் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இதில் ஒரு சில உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து தெரிவிக்கிறேன். நம்முடைய திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். கலசப்பாக்கம் தொகுதியில் அதன் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். எலத்தூர், மோட்டூர் என்ற ஊராட்சியில் ஒரு போக்குவரத்துப் பணிமனை அமைப்பதற்கான பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் இருக்கிறது. அதில் இன்னும் சில பணிகள் முடிப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதாகக் கூறியிருக்கிறார். அந்த நிதி வழங்கி, அந்தப் பணி முடிவுற்றால், அங்கே ஒரு tyre unit கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், பல்வேறு பணிமனைகளை சீரமைக்க வேண்டுமென்று பல சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 

போக்குவரத்துத் துறை மீதான விவாதம்... பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேசியது என்ன? - முழு விவரம்!

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலே அதைக் கொடுத்தால் சரியாக இருக்குமென்ற கோரிக்கையை இந்த நேரத்தில் நான் வைக்கின்ற நேரத்தில், பேரவைத் தலைவர் அவர்கள் ரூ.30 இலட்சத்தினை அவருடைய தொகுதியிலிருக்கின்ற திசையன்விளை பணிமனைக்கு வழங்கியிருக்கிறார்கள். பேரவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்களோடு தொடங்கி, 25 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபாய் இருபது இலட்சம், ரூபாய் முப்பது இலட்சம் என வழங்கி அந்தப் பணிமனைகளுக்கான பணிகள் இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனைச் சொல்வதற்கு காரணம். . .

பேரவைத் தலைவர்: நாங்கள் 30 இலட்ச ரூபாய் கொடுத்தால், நீங்கள் துறைச் சார்ந்து ரூபாய் 30 இலட்சம், 50 இலட்சம் தர வேண்டும் அல்லவா! Matching grant. அதைத் தாருங்கள்.

எஸ்.எஸ். சிவசங்கர்: வருகின்ற காலத்தில் நிதிநிலைமை சீராகின்ற காலத்தில் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும். 

பேரவைத் தலைவர்: கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

எஸ்.எஸ். சிவசங்கர்: கவனத்தில் கொள்ளப்படும்.

பேரவைத் தலைவர்: நன்றி.

எஸ்.எஸ். சிவசங்கர்: நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் பின்னால் இருந்து தட்டுகிறார்கள். (குறுக்கீடு) அவர்களெல்லாம் MLA நிதியிலிருந்து பணிமனையினை repair செய்வதற்கு பணம் கொடுத்தார்கள். (குறுக்கீடு) மொத்தமாக நன்றி சொல்லிவிடுகிறேன். அவை முன்னவர் அவர்களின் அறிவுரைப்படி, மொத்தமாக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதேபோல முக்கியமான சில கோரிக்கைகள். சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கல்வராயன் மலையிலே கீழிருந்து மலைமீது பேருந்துகள் செல்கின்ற காரணத்தினால், அங்கே விடியல் பயணத் திட்ட பேருந்துகளை இயக்க முடியவில்லையென்று உறுப்பினர் தா.உதயசூரியன் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார். அங்கு இருக்கின்ற ஒரு பேருந்து நிலையத்தினை பேருந்து பணிமனையாக மாற்றியமைத்து, அங்கே பேருந்துகளை நிறுத்தி வைத்து விடியல் பயணத் திட்டப் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 

அதேபோல புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற வாணாபுரம் என்ற வட்டத்தில், ரிஷிவந்தியம் தொகுதியில் உறுப்பினர் க.கார்த்திகேயன் அவர்கள் ஒரு பணிமனை அமைக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள். என்ன பிரச்சினையென்றால், நம்முடைய துறையில் நிதி இல்லாத ஒரு சூழல்தான் இருக்கிறது. நமக்கு நாமே திட்டத்திலோ, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலோ அல்லது அவர்கள் சொந்த பொறுப்பிலோ அந்தப் பணிமனை அமைப்பதற்கான பணிகளைச் செய்தால், அந்தப் பணிமனைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்தச் செய்தியினை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்ததாக அறிவிப்புகள். அறிவிப்புகள் புத்தகம் கொடுங்கள். (குறுக்கீடு) காட்பாடிக்கும் அவை முன்னவர் அவர்கள் அவர்களுடைய சொந்த நிதியிலே அதற்கான பணிகளை அமைத்து கொடுக்கின்றபோது அந்தப் பணிமனை அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories

Related Stories