தமிழ்நாடு

ரூ.44.50 கோடியில் எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.44.50 கோடியில் எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.4.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஏதுவாக, சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர்கல்வி பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை, எம்.சி. இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் சமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னையில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் அவர்களது தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களது திறனை மேம்படுத்தவும் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மாணவர் விடுதிக் கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் அவர்கள் 12.7.2023 அன்று அடிக்கல் நாட்டினார்.

ரூ.44.50 கோடியில் எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் அவர்கள் 29.3.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக எம்.சி. இராஜா விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 44.50 கோடி ரூபாய் செலவில் விடுதி கட்டி முடிக்கப்பட்டு, நல்லிணக்கத்தை போற்றும் வண்ணம், சமத்துவ நாளான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி மாணவர்களின் நலனுக்காக இந்த விடுதி திறக்கப்படும் என்றும், இக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். இப்புதிய விடுதிக் கட்டடம், மொத்தம் 1,01,101 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 10 தளங்களுடன், 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கூடிய 121 தங்கும் அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் தரை தளத்தில் சமையலறை, உணவருந்தும் கூடம், கண்காணிப்பாளர் அறை, பராமரிப்பாளர் அறை, ஓய்வறை, 4 மாணவர் தங்கும் வகையிலான அறைகள், முதல் தளத்தில் நூலக அறை, பன்னோக்கு கூடம், 9 மாணவர் தங்கும் வகையிலான அறைகள், இரண்டாம் தளம் முதல் பத்தாவது தளம் வரை ஒவ்வொரு தளத்திலும் நூலக அறை, 12 மாணவர் தங்கும் வகையிலான அறைகள் மற்றும் இக்கட்டடத்தின் மேல்தளத்தில் 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு நீர்தேக்க தொட்டிகள், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு வசதி, 1,20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, சுற்றுச்சுவர், உட்புற சாலை வசதிகள், தீயணைப்பு வசதிகள், மின்தூக்கிகள், பார்வையாளர் அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories