தமிழ்நாடு

“ஒரு மாதத்திற்குள் 7,900 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்!” : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

“அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கான்வாடி உதவியாளர் என மொத்தம் தமிழ்நாட்டில் 7,900 புதிய அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.”

“ஒரு மாதத்திற்குள் 7,900 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்!” : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.

“ஒரு மாதத்திற்குள் 7,900 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்!” : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

அதன் பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விடையளிக்கும் போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கான்வாடி உதவியாளர் என மொத்தம் தமிழ்நாட்டில் 7,900 புதிய அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சத்துணவுத் துறையில் 8,997 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இத்துறைகளிலும் பணி உயர்வுகள் வழங்குவது நடைமுறையில் இருக்கிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories