தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு : மாநில முதல்வர்கள், தலைவர்களுக்கு நேரில் அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க மாநில தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு :  மாநில முதல்வர்கள், தலைவர்களுக்கு நேரில் அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் ஆபத்துள்ளது என்பதை தனது முதல் எதிர்ப்பு குரலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

இதோடு நிற்காமல் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பிற்கு ஒன்றிணைந்து குரல் எழுப்ப செய்துள்ளார். மேலும் இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு :  மாநில முதல்வர்கள், தலைவர்களுக்கு நேரில் அழைப்பு!

அதன்முதல்படியாக சென்னையில் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு சென்னையில் நடைபெற உள்ள “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சரின் அழைப்பு கடிதத்தை நேரில் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories