தமிழ்நாடு

திருச்சி விமானநிலையத்தில் இந்தி மட்டுமே தெரிந்த பணியாளர் : அநாகரிகமாக பேசியதால் அதிர்ச்சி !

திருச்சி விமானநிலையத்தில் இந்தி மட்டுமே தெரிந்த பணியாளர் : அநாகரிகமாக பேசியதால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் சிங்கப்பூர்,மலேசியா, துபாய் மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படு வருகிறது. இந்த விமான நிலையத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விமான நிலையத்திற்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நுழையும் போது நுழைவு தொகையை செலுத்தி செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் உறவினரை அழைப்பதற்காக சென்ற நபர்களின் வாகனத்திற்கு லாக் செய்யப்பட்டு அபராத அபராதம் விதிக்கப்பட்டு இருந்து.

அப்போது விமான நிலைய பார்க்கிங் ஊழியரிடம் ஏன் காரை லாக் செய்து அபராதம் கட்ட வேண்டும் என கார் உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பணியாளர் ஹிந்தியில் பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து கார் உரிமையாளர் "எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம்தான் தெரியும், ஹிந்தி எனக்கு தெரியாது" என கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் இந்தி மட்டுமே தெரிந்த பணியாளர் : அநாகரிகமாக பேசியதால் அதிர்ச்சி !

ஆனால் கார் பார்க்கிங் பணியாளர் ஹிந்தியில் அநாகரீக வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கார் பார்க்கிங் வசூலிப்பவர் மற்றும் கார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த கார் உரிமையாளர் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் இடங்களில் தமிழ் தெரிந்தவர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களை பணியில் அமர்ந்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories