தமிழ்நாடு

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு... டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு !

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு... டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் 34,807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி தியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 6-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories