நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பொருத்தமில்லாத அரசியல் பேசி வருகிறார். பா.ஜ.கவின் கொள்கைப் பரப்பு செயலாளரா? சீமான் என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பிளள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து அரசியல் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
தலித் மக்களை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் பக்கம் ஈர்ப்பதற்காக, அடிக்கடி அவர்களை பற்றி பேசி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் கூறுவது அப்பாவி மக்களை ஏமாற்றும் சூழ்ச்சி இது. இதில் ஒருபோதும் தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்கவும், விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?. ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவாளர்களின் வாக்குகளை கவருவதற்காக இந்த யுக்தியை கையாளுகிறாரா? என்ற ஐயமும் எழுகிறது.
பார்ப்பன உயர்சாதியினர் பெரியாரின் சம காலத்திலேயே அவரை வீழ்த்த முயற்சித்தார்கள். அது முடியவில்லை. அந்த வரிசையில் இப்போது, சீமானும் ஈடுபட்டு வருகிறார். இவர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது.
சீமான் கருத்தியல் அடிப்படையில் எந்த விவாதத்தையும் வலுவாக வைக்கவில்லை. தனிநபர் தாக்குதல்கள், தனி கட்சியின் மீதான தாக்குதல்கள் என அவருடைய அரசியல் ஒரு இனவாதத்தை நோக்கி பாசிச வாதிகளின் கருத்துகளை கொண்டதாக பரிணாமம் பெற்று வருகிறது. இது சீமானின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல" என தெரிவித்துள்ளார்.