தமிழ்நாடு

அரசுக்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி : உடனே பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

நல்லகண்ணு அய்யாவின் வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசுக்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி : உடனே பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா டிச.26 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தோழர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் அமைச்சர்கள் மற்றும் மாற்று கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர் நல்லகண்ணுவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சென்னை கலைவாணர் அரங்கில் தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிலையில், ஐயா நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். அதில், ”விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories