தமிழ்நாடு

தொடர் கனமழை : தேனி மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தொடர் கனமழை : தேனி மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை முதல் அதிகரித்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கி இன்று காலை 8 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரை மஞ்சளார் ஆற்றில் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர்.

தொடர் கனமழை : தேனி மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !

தற்போது அணைக்கு நீர் வரத்து 672 கன அடியாக உள்ள நிலையில் மஞ்சளார் ஆற்றில் இருந்து 566 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories