தமிழ்நாடு

”ஃபெஞ்சல் புயலுக்கான நிதியை ஒன்றிய அரசு இன்னும் ஒதுக்கவில்லை” : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

ஃபெஞ்சல் புயலுக்காக ஒன்றிய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

”ஃபெஞ்சல் புயலுக்கான நிதியை ஒன்றிய அரசு இன்னும் ஒதுக்கவில்லை” :  அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட மிக அதிகமான மழை இருந்தது.

இதனால், யாரும் எதிர்பாராத அளவுக்கு மக்கள் வசிப்பிடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் விளைநிலங்கள் மூழ்கியது. சாலைகள்,பாலங்கள்,மின் கம்பங்கள் சேதமடைந்தது. புயல் கரையை கடந்த உடனே தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை துரித படுத்தி மக்களை மீட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. ரூ.944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசு ஒதுக்கியது நிதி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஃபெஞ்சல் புயல் நிவாரணத்துக்காக ஒன்றிய அரசு இன்னும் நிதிஒதுக்கீடு செய்யவில்லை. ஒன்றிய அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த ரூ. 944.80 கோடி ஜூன் மாதமே மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழக்கமாக ஒதுக்கவேண்டிய நிதிதான். அந்த நிதியை தாமதமாக ஒன்றிய அரசு தற்போது வழங்கியுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அதே போல தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த சேதத்துக்காக தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.37,906 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ. 276 கோடிதான், அதாவது நாம் கேட்டதில் 1% நிதியைதான் ஒதுக்கியது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories