தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... ரயில்களின் நேரம் மற்றும் ரயில் நிலையம் மாற்றம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு... ரயில்களின் நேரம் மற்றும் ரயில் நிலையம் மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அருகே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருற்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையமும் மாற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1.சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும்.

2.சென்னை - ஏற்காடு விரைவு ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

3.சென்னை - கொல்லம் சிறப்பு விரைவு ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும்.

4.சென்னை - மும்மை லோக்மான்ய சிலக் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்.

5.சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மாலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும்.

banner

Related Stories

Related Stories