தமிழ்நாடு

ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணி! : தமிழ்நாடு அரசின் அடுத்த சாதனை!

ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணி! : தமிழ்நாடு அரசின் அடுத்த சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில், சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ. 5,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாலமலை மற்றும் நவிப்பட்டி கிராமத்தில் ரூ. 5,947 கோடியில் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனத்தின் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணி! : தமிழ்நாடு அரசின் அடுத்த சாதனை!

நிலைய கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பதை கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் சமர்பித்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களின் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.20,114 கோடி முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை (Closed loop pumped storage projects) நிறுவுவதற்காக, முதலமைச்சர் முன்னிலையில் கடந்த 21ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 28ஆம் நாள் முதல் கட்ட பணி தொடங்கியது குற்றிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories