தமிழ்நாடு

மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா : GK மணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்!

மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா : GK மணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் கோ.க. மணி பேசும்போது குறுக்கிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்,

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி அவர்கள் இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories