தமிழ்நாடு

“மகளிர் நலனுக்காக செயல்படும் கழக அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு பதிலுரை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பதிலுரை

“மகளிர் நலனுக்காக செயல்படும் கழக அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு பதிலுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர்கள் துறைவாரியாக உறுப்பினர்களின் கேள்வி பதில்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும் மானியக் கோரிக்கைகளையும் துறைவாரியாக அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம் துறை & வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன் துறைக்கான மானியக் கோரிக்கையை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

முதலமைச்சர் அவர்களால் உயரிய ஊக்கத் தொகையாக (High cash incentives) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மற்ற வீரர்களுக்கு இணையாக, தேசிய அளவில் வெற்றிபெறுகிற மாற்றுத் திறனாளி வீரர்களுக்கும் கடந்த ஆண்டு முதல் உயரிய ஊக்கத் தொகை (High cash incentives) வழங்கப்பட்டு வருகிறது. 

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு, முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், போட்டிகள் நிறைவுபெற்ற ஒரே வாரத்தில் உயரிய ஊக்கத் தொகையை வழங்கி, கௌரவித்திருக்கிறோம். இதன்மூலம், அடுத்தடுத்தப் போட்டிகளில் பதக்கங்களை வென்று காட்டுவதற்கான ஊக்கத்தை நம் வீரர்கள் பெற்றுள்ளனர். 

கடந்த முறை ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்ற நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 இலட்சத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். 

கடந்த ஒலிம்பிக் போட்டியின்போது, தமிழ்நாட்டிலிருந்து 12 வீரர்கள் கலந்துகொண்டார்கள். இந்த முறை, அதாவது, இந்த ஆண்டில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 5 இலட்சமாக இருந்த ஊக்கத் தொகையை ரூபாய் 7 லட்சமாக உயர்த்தி வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தற்போது ஆணையிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

  இன்றைய தேதி வரை 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். விளையாட்டுத் துறையில், ஏழையெளிய பின்புலத்திலிருந்து வருகின்ற திறமையாளர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கிய திட்டம்தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைத் திட்டம்.  

விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்களை வாங்கவும் நிதி உதவித் தேவைப்பட்டால், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் www.tnchampions.sdat.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வீரரின் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு, மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் அவருக்கான நிதி உதவி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்படும்.

முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து முதல் நிதியாக ரூபாய் 5 லட்சத்தை அந்த அறக்கட்டளைக்கு வழங்கி பெருமைப்படுத்தினார்கள். 

நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுக்கு அறிமுகமான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி தேவை என்றால், அவர்களை  தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் விண்ணப்பிக்கக் கோரி அறிவுறுத்தலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில், 375 விளையாட்டு வீரர்களுக்கு, இதுவரை 8 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதியுதவியாகவும், ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

அதில், இதுவரை தேசிய மற்றும் சர்வதேச அளவிலானப் போட்டிகளில், 21 தங்கம் உள்பட 62 பதக்கங்களைப் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

உதாரணமாக, கோவையில் எளியதொரு குடும்ப பின்னணியைக் கொண்ட Cycling வீராங்கனை சகோதரி தமிழரசிக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைமூலம் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில், அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிலையில், அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று நம்முடைய தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தார் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

“முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்" அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றுகின்ற வகையிலும், விளையாட்டு என்பது நகரங்களில் மட்டுமே தேங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடும், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்–  Dr Kalaignar Sports Kits வழங்கும் திட்டம், ரூபாய் 86 கோடி செலவில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தோம்.

முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 33 விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட இந்த Kits-ஐ, இதுவரை, மதுரை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 72 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழங்கியுள்ளோம். மீதமுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும், Kalaignar Sports Kits விரைவில் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டன. 

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 12 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்து 630 வீரர்கள் கலந்து கொண்டார்கள். ஒன்றியப் பிரதமரும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இந்த விளையாட்டுத் துவக்கப் போட்டியில் கலந்துகொண்டு பாராட்டினார்கள். இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று ஒன்றியப் பிரதமர் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்த நேரத்தில் நான்  இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த ஒன்றிய அரசு சென்ற வருடம் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குக் கொடுத்த நிதி ரூபாய் 25 கோடி. இந்தமுறை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த நிதி வெறும் 10 கோடி. 

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், நம்முடைய தமிழ்நாட்டு வீரர்கள், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். கேலோ இந்தியா பதக்கப் பட்டியலில், தமிழ்நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வந்தது இதுவே முதல்முறை என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்றாண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். 15 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், 3 லட்சத்து 76 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் கலந்து கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். 

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற நம்முடைய பல சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதனடிப்படையில், புதிய விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும் என்பதையும் இந்த மாமன்றத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிய கண்டமுமே உற்று நோக்குகின்ற வகையில், 7 ஆவது ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை  ஹாக்கிப் போட்டியை சென்னையில் கடந்த ஆண்டு நடத்தினோம். 16 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் போட்டிக்காக தமிழ்நாடு அரசு 17 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. 

ஹாக்கி விளையாட்டில் தலைசிறந்த 6 ஆசிய நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்திய ஹாக்கி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பையை வென்ற நம் இந்திய ஹாக்கி அணியைப் பாராட்டும் வகையில், அன்றே நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையாக அன்றே அறிவித்து வழங்கினார்கள். 

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் 2023 என்ற உலகத்தரம் வாய்ந்த சதுரங்கப் போட்டியை நம்முடைய கழக அரசு 2 கோடி ரூபாய் செலவில் நடத்தியது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், தமிழ்நாடு செஸ் வீரர் தம்பி குகேஷ் அவர்கள், கனடாவில் நடைபெற்ற FIDE Candidates போட்டியில்  பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். தம்பி குகேஷ், தற்போது FIDE World Chess Championship-லும் பங்கேற்கவுள்ளார். உலகிலேயே மிக இளம் வயதில் FIDE World Chess Championship-ல் பங்கேற்கவுள்ள தம்பி குகேஷ், தமிழ்நாடு அரசின் ELITE திட்ட வீரர் என்பதையும் இந்த மாமன்றத்தில் பெருமையுடன் பதிவு செய்துகொள்கின்றேன்.

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் அவர்கள் தனது தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். எனவே, மாநில – தேசிய – சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதிக்கின்ற வீரர்களுக்கு அரசுத் துறை மற்றும் அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்ற ஆண்டில் மட்டும், 7 விளையாட்டு வீரர்கள் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.  

நம்முடைய விளையாட்டு அரங்கங்கள் சர்வதேசத் தரத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கில், உலகின் முதல் பாலிகிராஸ் பாரிஸ் ஜிடி (Poligras Paris GT) ஹாக்கி செயற்கை புல்தரை ஒலிம்பிக் தரத்தில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ நடத்துவதற்காக சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ரூபாய் 8 கோடியே 64 இலட்சம் செலவில் ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 355 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு கட்டமைப்புகளைப் பரவலாக்கம் செய்கின்ற வகையில், விளையாட்டு அரங்கங்கள் இல்லாத சட்டமன்றத் தொகுதிகளில் தலா ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக, 9 சட்டமன்றத் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், அவர்களுடைய தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா என்று வெட்டுத் தீர்மானங்கள்மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கான பதிலை இங்கே அளிக்க விரும்புகின்றேன். மினி ஸ்டேடியம் அமைக்கப்படாத சட்டமன்றத் தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அரசின் அனுமதியைப் பெற்று அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

சேலம் மேற்கு தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இரா. அருள் அவருடைய தொகுதியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் multi-purpose sports stadium அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்று கூறியிருந்தார்கள். அவருக்கு இந்த மாமன்றத்தின் வாயிலாக நான் விளக்கத்தை அளிக்க விரும்புகின்றேன். 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் multi-purpose sports stadium அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

விளையாட்டு வீரர்கள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் சென்ற ஆண்டு உங்களுக்குத் தெரியும் கலவரங்கள் நடைபெற்றபோது, அங்கிருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற முடியாத சூழல் இருந்தது.  இதனை உணர்ந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அங்குள்ள விளையாட்டு வீரர்களை மணிப்பூர் விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அதன் பேரில், முதலமைச்சர் அவர்களுடைய அழைப்பின் பேரில் சுமார் 20 மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து வாள்வீச்சு மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்காக 30 நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி பெற்றார்கள். அவர்களுக்கான விமானப் பயணக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே, தமிழ்நாடு அரசே ஏற்றது. 

திராவிட மாடல் என்றால் என்னவென்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் என்பதை எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற அந்த மணிப்பூர் வீரர்களில் இரண்டு பேர், கேலோ இந்தியா இளையோர் போட்டியில் 2 பதக்கங்களைக் வென்றனர் என்பதை இந்த மாமன்றத்தின் வழியே தெரிவித்துக்கொள்கின்றேன். 

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை நம் முதலமைச்சர் அவர்கள் அளித்துள்ளார்கள். நம் முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, அந்த மைதானத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்கள் முன்பு, நாம் கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம்.  இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்ற தகவலையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். 

மேலும், நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை, Squash World Cup 2023, World Surfing League, HCL Cyclothon, Tamil Nadu Sports Science  International Conclave - TASCON போன்ற பல்வேறு நிகழ்வுகளை கடந்த ஓராண்டில் மட்டும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது.

அடுத்து, இந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில் தமிழ்நாடு NCC இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடத்தைப் பெற்றது. NSS மற்றும் NCC மாணவர்களை டெல்லியில் நடைபெறுகின்ற குடியரசு தின அணிவகுப்புக்கு விமானத்தில் அழைத்துச் சென்று திரும்ப விமானத்திலேயே அழைத்து வருவோம் என்ற வாக்குறுதியை  சென்ற ஆண்டு அறிவித்திருந்தோம். அதனை நிறைவேற்றும் வகையில், அதற்கான ஆணைகள் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிறப்பிக்கப்பட்டன. 

அதன்படி, கடந்த குடியரசு தின அணிவகுப்புக்கு நம்முடைய NSS மாணவர்கள் அனைவரும் விமானத்தில் டெல்லி சென்று வந்ததை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

உதயநிதி ஸ்டாலின்: பேரவைத் தலைவர் அவர்களே,  முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அங்கீகாரங்களும் – பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில், Confederation of Indian Industry-CII என்ற அமைப்பின் சார்பாக, "விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” அதாவது Best State for Promoting Sports என்ற அந்த உயரிய விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கி கௌரவித்தது.

அதே போல, ‘தி இந்து’ நாளிதழ் நடத்துகின்ற Sports Star பத்திரிகை. Sportstar Aces Award 2023-ல் “விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்” எனும் விருது தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு இந்த விருது ஒடிஷா மாநிலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை:

திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த பணிகளைக் கண்காணிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது எனும் தலையாய பணியை, நம்முடைய சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளில், 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் 818 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு மட்டும், ரூபாய் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான 210 பணிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான கள ஆய்வுகள்:

ஆய்வுகளே தீர்வுகளைத் தரும் என்கிற நம்முடைய முதலமைச்சரின் அறிவுரையின்படி மாவட்ட அளவிலான களப்பணி ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். 

கடந்த ஆண்டு மட்டும் 27 மாவட்டங்களுக்கு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகளுடனும், அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டோம். 

அதில் வந்த, 495 Remarks தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளின்மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்மூலம் நடத்தப்படும் இந்த களப்பணி ஆய்வுக் கூட்டங்களில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம்

சென்னையின் வளர்ச்சியில் வடசென்னை மக்களின் பங்கு முக்கியமானது. அதன், சமூக பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு, வட சென்னையின் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை போக்கிடவும் ரூபாய் 4,000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பல்வேறு துறைகளின்மூலம் நடைபெறும் இப்பணிகளை நம்முடைய சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை ஒருங்கிணைத்து வருகிறது என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான பணிகள் சிலவற்றை மட்டும் இந்த மாமன்றத்தின் வாயிலாக குறிப்பிட விரும்புகிறேன்.

மின்சாரத்துறை சார்பாக ரூபாய் 628 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்கள் - Underground EB Line ஆக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும், இராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் 416 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 600 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் தளங்கள் கட்டப்படவுள்ளன. இப்படி, பல்வேறு முக்கியத் திட்டங்கள் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்மூலமாக செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குதல்:

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. எனவே, பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை போக்கிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.

இதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவின் பரிந்துரைகள் முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பட்டா இல்லாத பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கின்றோம். 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டை Skilled work force கொண்ட மாநிலமாகவும் உருவாக்க, முதலமைச்சருடைய கனவுத் திட்டமான,  ‘நான் முதல்வன் திட்டம்’, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ இன்றைக்கு பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின்மூலம் சென்ற கல்வியாண்டில், 14 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின்மூலம் 87 ஆயிரத்து 712 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு குறைந்தது 5 இலட்சம் ரூபாய் முதல், 45 இலட்சம் ரூபாய் வரை ஆண்டு சம்பளம், ஊதியம் கிடைக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்திட்டத்தில் திறன் பயிற்சி பெறும் நம் கல்லூரி மாணவர்கள் 25 பேர், 10 நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் உள்ள துர்ஹாம் (Durham University) பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (Artificial Intelligence and Data Science) துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேரடியாக அழைத்து பாராட்டினார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தியத் திறன் போட்டி 2024 – Indian Skill Competition - 2024:

சமீபத்தில் நடைபெற்ற இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் மற்றும் 17 சிறப்புப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று ஒன்றிய அளவில் மூன்றாவது இடத்தைத் தமிழ்நாடு பிடித்தது. 

நான் முதல்வன் போட்டித் தேர்வு ஊக்கத்தொகை. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவிலான ஒன்றிய அரசு அதிகாரிகளை உருவாக்கிடும் நோக்கத்தில்,  ‘நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு’ உருவாக்கப்பட்டது. இதன்மூலம், அகில இந்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் சென்றாண்டு தேர்ச்சி பெற்ற 453 மாணவ, மாணவியருக்கு தலா ரூபாய் 25,000 வீதம் மொத்தம் ரூபாய் 1 கோடியே 13 இலட்சத்து 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாணவர்களில் 117 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 39 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

2021–2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 27 பேர் மட்டுமே UPSC தேர்வில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு 45 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு, நான் முதல்வன் திட்டம் மிக, மிக முக்கிய காரணம்.

இவை மட்டுமின்றி, “உயர்வுக்குப் படி, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், கல்லூரிக் கனவு, Skills on Wheels” போன்ற திட்டங்களையும் நம்முடைய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

 ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.  ‘ஆணுக்கு நிகர் பெண் என்று முழங்கினார்’ முத்தமிழறிஞர் கலைஞர். ‘இன்றைக்கு பெண்ணுக்கு நிகர் எவரும் இல்லை’ என்று சொல்லும் அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தந்து, ஒவ்வொரு மகளிரின் சிரிப்பிலும், அண்ணாவையும், கலைஞரையும், இனமான பேராசிரியரையும், தந்தை பெரியாரையும் கண்டு வருகிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் - கலைஞர் நூற்றாண்டில் முதலமைச்சர் அவர்களால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என்று, ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை, இந்த 10 மாதங்களில், தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 11 ஆயிரத்து 323 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், ‘புதுமைப் பெண்’ திட்டம் என மகளிர் நலனுக்காக அடுக்கடுக்கான திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நம்முடைய துறையும் மகளிர் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட 2021-2022 முதல் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு என  ரூபாய் 80 ஆயிரத்து 936 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சென்ற நிதியாண்டில், 4 இலட்சத்து 79 ஆயிரத்து 350 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில்  35 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்களால் எங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் வங்கிக் கடன் வழங்குவதில் அந்த இலக்கை எட்டுவோம் என்பதை இந்த மாமன்றத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம். 

பேரவைத் தலைவர் அவர்களே, 

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 

சுழல் நிதி. 2021-2022 முதல் தற்போது வரை 47 ஆயிரம் கிராமப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 70 கோடியே 55 இலட்சமும், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 49 கோடியே 91 இலட்சம் ரூபாயும் Revolving Fund, சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி மானியம்.  பெண்ணாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ஜி.கே.மணி அவர்கள் அளித்துள்ள வெட்டுத் தீர்மானத்தில், சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி மானியம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்குரிய பதிலை இந்த மாமன்றத்தின் வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் எக்காரணம் கொண்டும் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக கிராமப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2021–2022 முதல் தற்போது வரை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 106 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியத் தொகையாக 94 கோடியே 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ராஜ்குமார் அவர்கள், அளித்துள்ள வெட்டுத் தீர்மானத்தில் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில், 12 ஆயிரத்து 396 கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களும், 11 ஆயிரத்து 816 சுய உதவிக் குழுக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சுய உதவிக் குழு கூட்டங்கள், பயிற்சிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த இரண்டு வகையான கட்டடங்களும் இல்லாத 111 கிராம ஊராட்சிகளில் விரைவில் சுய உதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நகர்ப்புறங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்ய, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாவட்டத் தலைமையகங்களில் வணிக வளாகங்களை அமைத்து, அதற்கு ‘பூமாலை வணிக வளாகம்’ என்று பெயரிட்டார்கள்.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் உள்ள  பூமாலை  வணிக  வளாகங்கள் ரூபாய் 5 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.  இன்றைக்கு அந்த வளாகங்களில் நம்முடைய மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் வெற்றிகரமாக விற்பனையாகி வருகின்றன. 

நான் முதல்வன் போட்டித் தேர்வு ஊக்கத்தொகை. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவிலான ஒன்றிய அரசு அதிகாரிகளை உருவாக்கிடும் நோக்கத்தில்,  ‘நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு’ உருவாக்கப்பட்டது. இதன்மூலம், அகில இந்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் சென்றாண்டு தேர்ச்சி பெற்ற 453 மாணவ, மாணவியருக்கு தலா ரூபாய் 25,000 வீதம் மொத்தம் ரூபாய் 1 கோடியே 13 இலட்சத்து 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாணவர்களில் 117 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 39 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

2021–2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 27 பேர் மட்டுமே UPSC தேர்வில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு 45 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு, நான் முதல்வன் திட்டம் மிக, மிக முக்கிய காரணம்.

இவை மட்டுமின்றி, “உயர்வுக்குப் படி, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், கல்லூரிக் கனவு, Skills on Wheels” போன்ற திட்டங்களையும் நம்முடைய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

 ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.  ‘ஆணுக்கு நிகர் பெண் என்று முழங்கினார்’ முத்தமிழறிஞர் கலைஞர். ‘இன்றைக்கு பெண்ணுக்கு நிகர் எவரும் இல்லை’ என்று சொல்லும் அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தந்து, ஒவ்வொரு மகளிரின் சிரிப்பிலும், அண்ணாவையும், கலைஞரையும், இனமான பேராசிரியரையும், தந்தை பெரியாரையும் கண்டு வருகிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் - கலைஞர் நூற்றாண்டில் முதலமைச்சர் அவர்களால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என்று, ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை, இந்த 10 மாதங்களில், தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 11 ஆயிரத்து 323 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், ‘புதுமைப் பெண்’ திட்டம் என மகளிர் நலனுக்காக அடுக்கடுக்கான திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நம்முடைய துறையும் மகளிர் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்திட 2021-2022 முதல் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு என  ரூபாய் 80 ஆயிரத்து 936 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சென்ற நிதியாண்டில், 4 இலட்சத்து 79 ஆயிரத்து 350 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில்  35 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்களால் எங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் வங்கிக் கடன் வழங்குவதில் அந்த இலக்கை எட்டுவோம் என்பதை இந்த மாமன்றத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம். 

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 

சுழல் நிதி. 2021-2022 முதல் தற்போது வரை 47 ஆயிரம் கிராமப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 70 கோடியே 55 இலட்சமும், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 49 கோடியே 91 இலட்சம் ரூபாயும் Revolving Fund, சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி மானியம்.  பெண்ணாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ஜி.கே.மணி அவர்கள் அளித்துள்ள வெட்டுத் தீர்மானத்தில், சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி மானியம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்குரிய பதிலை இந்த மாமன்றத்தின் வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் எக்காரணம் கொண்டும் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக கிராமப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2021–2022 முதல் தற்போது வரை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 106 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியத் தொகையாக 94 கோடியே 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ராஜ்குமார் அவர்கள், அளித்துள்ள வெட்டுத் தீர்மானத்தில் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில், 12 ஆயிரத்து 396 கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களும், 11 ஆயிரத்து 816 சுய உதவிக் குழுக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சுய உதவிக் குழு கூட்டங்கள், பயிற்சிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த இரண்டு வகையான கட்டடங்களும் இல்லாத 111 கிராம ஊராட்சிகளில் விரைவில் சுய உதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நகர்ப்புறங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்ய, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாவட்டத் தலைமையகங்களில் வணிக வளாகங்களை அமைத்து, அதற்கு ‘பூமாலை வணிக வளாகம்’ என்று பெயரிட்டார்கள்.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் உள்ள  பூமாலை  வணிக  வளாகங்கள் ரூபாய் 5 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.  இன்றைக்கு அந்த வளாகங்களில் நம்முடைய மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் வெற்றிகரமாக விற்பனையாகி வருகின்றன. 

அதேபோல, சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்த ‘மதி’ என்ற தனித்துவ முத்திரையுடன் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இணையதளம் வாயிலாகவும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய www.mathisandhai.com எனும் இணையதளம் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. மேலும், கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்காக முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின்பேரில், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100  ‘மதி எக்ஸ்பிரஸ்’ மின் வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் மகளிர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், சிறுதானிய உணவு அரங்கத்தினை திறந்து வைத்தோம். அதைத் தொடர்ந்து,  இப்பொழுது 32  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுடைய சிறுதானிய சிற்றுண்டி உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களிலும் விரைவில் இத்தகைய உணவகங்கள் திறக்கப்படவுள்ளன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்பினை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. அதை நம் மகளிரினுடைய உழைப்பின்மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம். 

27-06-2024

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்

பேரவைத் தலைவர் அவர்களே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறையைச் சார்ந்த அறிவிப்புகளை உங்கள் அனுமதியோடு வெளியிடுகின்றேன்.

அறிவிப்புகள்

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

  1. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும். 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கீழ் அமைக்கப்படும் மாவட்ட திறன் மையத்தில், நான் முதல்வன் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு திறன் மேம்பாட்டு அலுவலர், இளம் வல்லுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத் தன்னார்வலர்கள் கொண்ட குழு செயல்படும். இதே போன்று தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு மாவட்ட திட்ட அலுவலர், இளம் வல்லுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத் தன்னார்வலர்கள் கொண்ட குழு செயல்படும்.

  1. அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும். 

அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு தலா ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் கீழ் செயல்படும். 

இந்த அலகு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்தே செயல்படும்.

  1. வேலைவாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு “திறன்ஓலைகள்” (Skill Vouchers) மற்றும் பணியிடப் பயிற்சி  (Internship) வழங்கும் “திறன்தமிழ்நாடு-நிறைபள்ளிகள்” (TN Skills-Finishing Schools) என்ற திட்டம்  100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக, கல்லூரி பட்டப் படிப்பை முடித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் பட்டப்படிப்பு, தனித்திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு “திறன்தமிழ்நாடு-நிறைபள்ளிகள்” (TN Skills-Finishing Schools) என்ற மாபெரும் திட்டம் துவங்கப்படும். பயிற்சியின் முடிவில் பணியிடப் பயிற்சி (Internship) மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும்.  

சர்வதேச சான்றிதழ் மற்றும் தொழில்துறை அங்கீகாரத்துடன் திறன் அடிப்படையிலான படிப்புகளை வழங்கச் சிறந்த நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு முழு மற்றும் பகுதி அளவு மானியத்துடன் கூடிய திறன் ஓலைகளை வழங்கும். பின்தங்கிய இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் திறன் ஊக்கத் தொகையினையும் வழங்கும். 

  1. நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான நான் முதல்வன் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நான் முதல்வன் திறன் அடிப்படையிலான படிப்புகளைத் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

  1. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர “சிகரம்தொடு” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன்பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். மாணவர்கள் தகுதித் தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் அடையாளம் காணப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த திறன்கள் மற்றும் அனுபவரீதியான செயல் இலக்குகள் மூலம் மேம்படுத்தப்படுவார்கள். இவர்களுக்குச் சிறந்த தொழில்முறை பயிற்றுனர்கள் மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு உயர்தர படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

  1. நமது திராவிட மாடல் அரசின் முக்கிய குறிக்கோளான 2030-ல் ஒரு  டிரில்லியன் அமெரிக்கன் டாலர் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே, பெண்கள் முறைசார்ந்த தொழில்கள் மற்றும் உயர்தர பணிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும். இதற்காக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2024-2029)  1185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இவ்வாண்டு 168 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பின்வரும் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

i. மாவட்டங்களில் உள்ள பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப மகளிருக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

ii. மகளிருக்குப் பயனளிக்கக்கூடிய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், உளவியல் கலந்தாய்வு, வேலை வாய்ப்பு தொடர்பான விவரங்கள், பெண்களின் பணியிட பாதுகாப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில் மகளிர் தகவல் வங்கி  உருவாக்கப்படும். 

iii அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்களுக்கு ஏற்றப் பணியினை தேர்ந்தெடுப்பதற்காக உளவியல் பரிசோதனை (Psychometric Test) மூலம் அவர்களது திறமைகளைக் கண்டறிய ‘திறமை மதிப்பீட்டு தளம்’ (Talent Assessment Platform) உருவாக்கப்படும். 

iv. தமிழ்நாட்டில் பெண்களைத் தொழில் முனைவோர்களாக்க பள்ளி பருவத்திலேயே மாணவிகளுக்குக் கற்பிக்கும் பொருட்டு, பள்ளிகளில் தொழில்முனைவு குறித்த பாடத்திட்டம் (Earlypreneurship Programme)  இவ்வாண்டு முதல் சேர்க்கப்படும். 

v. வகுப்பறைக் கற்றலுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க, அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் மாணவிகளுக்குத் தொழில் துறை சார்ந்த உள்ளுரை பயிற்சி (Internship Training) அளிக்கப்படும். 

vi. தமிழ்நாட்டில் உள்ள 10 மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ITI), 4 மகளிர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (Polytechnic) 4,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் STEM (Science Technology Engineering & Mathematics) மையங்கள் உருவாக்கப்படும். 

vii. பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் “மாதிரி மழலையர் காப்பகங்கள்” (Model Creche cum After School care) மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களை பராமரிக்கும் வகையில் “முதியோர் சமூக மையங்கள்” (Elderly Community Hubs) உருவாக்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

  1. 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

 சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக சமுதாய முதலீட்டு நிதியை பொருளாதார கடன் உதவியாக வழங்கப்படும். இந்த ஆண்டு 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். இதற்காக மொத்த தொகை 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    2. 40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 90 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

 திறன் பயிற்சியானது கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறது.  இந்த ஆண்டு 10,000 கிராமப்புற இளைஞர்களுக்கு 60 கோடி ரூபாய்  செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும். மேலும்,  சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 30,000 இளைஞர்களுக்கு 30 கோடி ரூபாய் செலவில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

 3. 4,000 தனிநபர் நிறுவனங்கள் மற்றும் 75 குழு நிறுவனங்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் முறையான நிதி நிறுவனங்களிடமிருந்து 150 கோடி ரூபாய் (இதனில், 50 கோடி ரூபாய் இணை மானிய நிதியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்) கடன் உதவி வழங்கப்படும்.

இணை மானிய நிதி திட்டம் (MGP), முதல் தலைமுறை தொழில்முனைவோர், பெண்கள் தலைமையிலான வணிகங்கள், நிறுவன குழுக்கள், தயாரிப்பாளர் கூட்டமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் நிதித்துறைகளில் சவாலாகக் கருதப்படும் பிற வகை நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.  இது கிராமப்புற தொழில்முனைவோருக்கு முறையான நிதிக்கான அணுகுதலை எளிதாக்குகிறது.  கடன் தொகையில் 70% தொகையினை தவணை முறையில் திருப்பிச் செலுத்தினால், கடன் வாங்கியவர் 30% மானியத்திற்கு தகுதியுடையவராவர்.

2024-2025 ஆம் நிதியாண்டில், 4,000 தனிநபர் நிறுவனங்கள் மற்றும் 75 குழு நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் 150 கோடி ரூபாயிலிருந்து 50 கோடி ரூபாய் இணை மானிய நிதியாக வழங்கப்படும்.

 4. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் (சுமார் மூன்று இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் குழுக்களுக்கு) 30 கோடி ரூபாய் செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.

சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தகுதி மற்றும் திறமையை மேம்படுத்த அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் தலைமைப்பண்பு ஆகியவற்றில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.  

5. 10,000 சுய உதவிக் குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.

  சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000/- வீதம் அவர்களின் சேமிப்போடு, தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி  கடன் இணைப்பு பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும். 

6. 7,500 தொழில் முனைவோர்களுக்கு ஐந்து கோடியே அறுபத்து இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

 தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 7,500 தொழில் முனைவோர்களுக்கு ஐந்து கோடியே அறுபத்து இரண்டு இலட்சம் ரூபாய்  செலவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

7. “வானவில் மையம்" என்றழைக்கப்படும் பாலின வள மையமானது வட்டார அளவில் ஒரு மாவட்டத்திற்கு 3 மையங்கள் வீதம் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள் ஐந்து கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். 

   சமூகத்தில் பின்தங்கிய மற்றும் வளரிளம் பெண்கள் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  இதற்கு தீர்வு காணும் வகையில் “வானவில் மையம்" என்றழைக்கப்படும் பாலின வள மையமானது, வட்டார அளவில் ஒரு மாவட்டத்திற்கு 3 மையங்கள் வீதம் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள்  ஐந்து கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.  ஊட்டச்சத்து, உடல் மற்றும் மன நலம், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தீர்வு காண வழிவகை செய்யப்படும்.

    8. சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி 200 வட்டாரத்தில் உள்ள 6,083 ஊராட்சிகளில் நான்கு கோடியே அறுபத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

 சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி 200 வட்டாரத்தில் உள்ள 6,083 ஊராட்சிகளில் நான்கு கோடியே அறுபத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும். மேலும் ஊரகப் பகுதிகளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதார மேலாண்மை மன்றம் (Menstrual Hygiene Management Council) மற்றும் அறிவுசார்மையம் அமைக்கப்படும்.

9. அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கும், பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு சார்ந்த சட்ட விழிப்புணர்வு பயிற்சி மூன்று கோடியே இருபத்து நான்கு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

  அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கும், பெண்களுக்கான சொத்துரிமை, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு சார்ந்த சட்ட விழிப்புணர்வு பயிற்சி  மூன்று கோடியே இருபத்து நான்கு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

  10. பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறுதானிய போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.

 மக்களிடையே ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்திடவும், பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும்  ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில்  விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஊராட்சி/வட்டாரம்/மாவட்டம் மற்றும் மாநில அளவில் உணவு/ சிறுதானிய  போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.  

11.  சுய உதவிக் குழு மகளிர் விவசாயிகளால் உயர் மகசூல் தரும் கரும்பு இரகங்களின் பரு நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட, அலகுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 50 அலகுகளுக்கு ஒரு கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும்.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் கரும்பு பயிரில் அதிக மகசூலை உறுதி செய்வதற்காக, தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக் குழு மகளிர் விவசாயிகளால் 50 அலகுகள் அமைக்கப்பட்டு உயர் மகசூல் தரும் கரும்பு இரகங்களின் பரு நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட, ஒரு அலகுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 50 அலகுகளுக்கு ஒரு கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும். 

12. மாநிலம் முழுவதும், 50 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 50 இளைஞர் திறன் திருவிழாக்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின்கீழ் கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 50 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு  முகாம்கள் 50 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், பின்தங்கிய 50 வட்டாரங்களில் பல்வேறு திறன் பயிற்சித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறவும் 25 இலட்சம் ரூபாய் செலவினத்தில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும்.

13. பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மதி கஃபே (Mathi Cafe) அமைக்கப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்கீழ் முன்மாதிரி அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மதி கஃபே (Mathi Cafe) அமைக்கப்படும்.

14. 4,250 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்திட சமையல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கிட, திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 4,250 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் தயாரிக்க சுய உதவிக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்து 30 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி அளிக்கப்படும்.

15. மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் (Apartment Bazaars) 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காட்சிகள் நடத்தப்படும். 

சென்னை போன்ற பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மாவட்டத்திற்கு தலா 5 சமுதாய வளப் பயிற்றுநர்கள் உருவாக்கப்பட்டு, 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காட்சிகள் நடத்தப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

1. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற குறைந்தது 100 வீரர் / வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ் பணி ஆணை வழங்கப்படும்.

சென்ற ஆண்டு 7 வீரர் / வீராங்கனைகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 100 வீரர் / வீராங்கனைகளுக்கு பணி ஆணை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறையினை மேம்படுத்திட பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டின் சார்பாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் வீராங்கனையர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.   

இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர் வீராங்கனையர்களுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்.

2. டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். 

3. முதலமைச்சருடைய mini stadium திட்டம்; திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூபாய் 66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதையும் சமூகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை வளர்ப்பதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அதன் அடிப்படையில், 2024-25 ஆம் நிதி ஆண்டில், 22 சட்டமன்றத் தொகுதிகளில் ரூபாய் 66 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.

4. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டைச் சார்ந்த Cycling விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை மென்மேலும் வளர்த்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கில், இந்தியாவில் முதன்முறையாக ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை அமைக்கப்படும்.

5. SDAT நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கங்கள் பல்வேறு நிலையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்திடவும், அன்றாட பயிற்சிகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்திடவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், தற்போதுள்ள விளையாட்டரங்கங்களில் பராமரிப்புப் பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும். 

      களரி, அடிமுறை, சிலம்பம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் தென் தமிழ்நாட்டின் பழமையான பாரம்பரிய தற்காப்பு கலைகளும் அவற்றின் உட்பிரிவுகளான சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் முறைகள் போன்ற அரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சீரிய நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும்.

7. மதுரை மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள SDAT AGB வளாகத்தில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வசதியினை தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளும் பயன்படுத்தி சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தினைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.

8. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது பயன்பாட்டில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

9. அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளம் அமைக்கப்படும்.

அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தற்போது மண் ஆடுகளத்தைப் பயன்படுத்தி பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இம்மாவட்டங்களில் அதிகளவிலான திறமை வாய்ந்த Hockey விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் செயற்கை இழை Hockey ஆடுகளம் அமைக்கப்படும்.

10. SDAT-யின்கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2,330-லிருந்து 2,600-ஆக உயர்த்தப்படும் மற்றும் (i) உணவுப்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 250-லிருந்து ரூபாய் 350-ஆகவும், (ii) சீருடை மானியத் தொகை ரூபாய் 4,000-லிருந்து ரூபாய் 6,000-ஆகவும், (iii) உபகரண மானியத் தொகை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆகவும் உயர்த்தப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் 37 விளையாட்டு விடுதிகளில்   20 விளையாட்டுக்களில் 2330 மாணவ மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கான ஊட்ட உணவு, விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

11. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) எனும் Software செயல்படுத்தப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நமது வீரர்கள் நூலிழையில் பெரும்பாலான வெற்றிகளைத் தவற விடுகின்றனர். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளது திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) செயல்படுத்தப்பட்டு, அதிகளவிலான பதக்கங்கள் வெல்வது உறுதி செய்யப்படும்.

12. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூரில் Fencing, Badminton, Cycling, Archery மற்றும் Table Tennis ஆகிய விளையாட்டுக்களுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் விளையாட்டரங்கில் Tennis விளையாட்டிற்கும், வேளச்சேரியில் உள்ள SDAT AGB வளாகத்தில் Swimming மற்றும் Gymnastics விளையாட்டுக்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் (Centre of Excellence) அமைக்கப்படும்.

பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களிடையே அதிகரித்து வரும் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூரில் Fencing, Badminton, Cycling, Archery மற்றும் Table Tennis ஆகிய விளையாட்டுக்களுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் விளையாட்டரங்கில் Tennis விளையாட்டிற்கும், வேளச்சேரியில் உள்ள SDAT AGB வளாகத்தில் Swimming மற்றும் Gymnastics விளையாட்டுக்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (Centre of Excellence) அமைக்கப்படும்.

13. சென்னை, மேயர் இராதாகிருஷ்ணன் Hockey விளையாட்டு அரங்கில் Hockey விளையாட்டிற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைப்பந்து மற்றும் கபாடி ஆகிய விளையாட்டுக்களுக்கான கல்லூரி மாணவியர்களுக்கு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியும் (Sports Hostel of Excellence), கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகள் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் (Sports Hostel) அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்தி வலுவான விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்கிறது.  அவ்வகையில், உயர்தர பயிற்சி வழங்கிடும் வகையில் சென்னை, மேயர் இராதாகிருஷ்ணன் Hockey விளையாட்டு அரங்கில் Hockey விளையாட்டிற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைப்பந்து மற்றும் கபாடி ஆகிய விளையாட்டுக்களுக்கான கல்லூரி மாணவியர்களுக்கு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியும் (Sports Hostel of Excellence), கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகள் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் (Sports Hostel) அமைக்கப்படும்.

14. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் 37 SDAT விளையாட்டு விடுதிகளுக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் 37 SDAT விளையாட்டு விடுதிகளுக்கு பல்வேறு நிலையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்திடவும், அன்றாட பயிற்சிகள் மற்றும் பயிற்சி முகாம்களுக்குத் தேவையான நவீன விளையாட்டு உபகரணங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

15. மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளத்துடன் கூடிய முதன்மை நிலை பயிற்சி மையம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.

இந்தியாவின் முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகமான தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் இறகுபந்து, மேசைப்பந்து, 8 வரிசை செயற்கை இழை தடகளப்பாதை, சைக்ளிங் வெலோட்ராம் உள்ளிட்ட பல்வேறு உலகத்தர வசதிகள் உள்ளன. இவ்வாண்டு விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 

16. SDAT–ஆல் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானியம் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூபாய் 20 இலட்சத்திலிருந்து ரூபாய் 25 இலட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டிற்கு ரூபாய் 15 இலட்சத்திலிருந்து ரூபாய் 20 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

மாநில விளையாட்டுச் சங்கங்களின் செயல்பாட்டினை ஊக்குவித்திடும் வகையில், மாநில விளையாட்டுச் சங்கங்களுக்கான மானியம் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூபாய் 20 இலட்சத்திலிருந்து ரூபாய் 25 இலட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டிற்கு ரூபாய் 15 இலட்சத்திலிருந்து ரூபாய் 20 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

17. புதிய இளைஞர் கொள்கை (Youth Policy) அறிமுகம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெரும்பான்மையாக உள்ளதைக் கருத்தில் கொண்டு அவர்கள் நல்லொழுக்கத்துடன் சமூகத்திற்கு உயரிய பங்களிப்பினை அளிக்கச் செய்வதன் முக்கியத்துவத்தைக் கருதி, ‘புதிய இளைஞர் கொள்கை’ அறிமுகப்படுத்தப்படும்.

18. அனைத்து மாவட்டங்களிலும் "விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம்"- STAR அகாடமி உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் சில விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. அவ்விளையாட்டுக்களில் கூடுதல் கவனம் செலுத்தும்பட்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய இயலும். அதனைக் கருத்தில் கொண்டு, தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் -STAR அகாடமி உருவாக்கப்படும்.

19. SDAT கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மாற்றி அமைக்கப்படும்.

20. தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூபாய் 14 இலட்சத்திலிருந்து ரூபாய் 28 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் 30 எண்ணிக்கையிலான நவீன Air Rifle ரக துப்பாக்கிகள் வாங்கிடவும் நிதி உதவி அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில் இவ்வாண்டு தமிழ்நாடு தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்படும். 

21. 2024 ஆம் ஆண்டு முதல் நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு ரூபாய் 50 இலட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் சமூக சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.  ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சிறப்பு செயல்பாடுகளுக்கு நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பிற்கு ரூபாய் 50 இலட்சம் தொடர் செலவினமாக வழங்கப்படும்.

22. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) கீழ் ஒரு விளையாட்டு வீரருக்கு ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 2 இலட்சத்திலிருந்து ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகள் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் தொகை ஆண்டிற்கு ரூபாய் 2 இலட்சத்திலிருந்து ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

23. தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் Expert Coaches-ஆக பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனையர்கள் உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் உயர்ந்த நோக்கில், தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிபுணத்துவ பயிற்றுநர்களாகப் பணியமர்த்தப்படுவர்.

24. சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன்கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தற்போது 345 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மூன்று (விளையாட்டு விடுதி, சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை மையம்) வகையிலான தங்குமிட வசதிகளுடன்கூடிய விளையாட்டு விடுதிகளில் உள்ளனர்.  தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மாணவர்கள் தங்கி பயிற்சி பெற ஏதுவாக, நவீன வசதிகளுடன்கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய இந்தப் பதிலுரையை முடிக்கும் முன்பு, இந்த மன்றத்தில் நான் ஒரு உறுதியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

புகழ்பெற்ற Sapiens – A Brief History of Humankind என்ற நூலினை எழுதிய வரலாற்று ஆய்வாளர் யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari), அவரது உரை ஒன்றில்,  “எப்படி கம்ப்யூட்டரில் algorithm உள்ளதோ, அதே மாதிரி உயிரினங்களுக்கும் algorithm உண்டு” என்று சொன்னார். எப்படி ஒவ்வோர் உயிரினத்துக்குள்ளும் ஒரு algorithm இருக்கிறதோ, அதேமாதிரி ஒவ்வோர் இனத்துக்கென்றும் ஒரு algorithm இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் எப்படி Dravidian Model என்று சொல்கிறோமோ, அதே மாதிரி Dravidian Algorithm என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த Dravidian Algorithm ஏதோ ஓரிரு நாளில் உருவானதல்ல. இதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும், அனுபவங்களும் நீதிக் கட்சி காலத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததற்காக அடித்துக் கொல்லப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதம் தொடங்கி, ‘நீட்’ தேர்வால் கொல்லப்பட்ட தங்கை அரியலூர் அனிதா வரையிலான அத்தனை உயிரிழப்புகளையும் கண்டதுதான் இந்த Dravidian Algorithm. 

நீட் தேர்வு நல்லதா, கெட்டதா என்பதை ஒட்டுமொத்த நாடும் புரிந்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் புரிந்துக் கொண்டார்கள். இந்தித் திணிப்பை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் புரிந்துக்கொள்வதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் சிந்திப்பதற்கு முன்பே கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வகையில் காலை உணவுத்திட்டம், விடியல் பயணத் திட்டம் போன்றவற்றை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள்.

இப்படி ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய சமூக நலத் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு என்றைக்கோ நடைமுறைப்படுத்திவிட்டது. இதற்கெல்லாம் காரணம், தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மெருகேற்றப்பட்ட இந்த Dravidian Algorithm தான். 

இன்றைக்கும், எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், தமிழ்நாடு மதவாதத்தின் பக்கமும் சாதியவாதத்தின் பக்கமும் சாயாமல் நிற்பதற்குக் காரணம் இந்த Dravidian Algorithm தான். தமிழ்நாடு அரசை எப்படி Dravidian Model வழி நடத்துகிறதோ, அதே மாதிரி தமிழ்நாட்டு மக்களை இந்த Dravidian Algorithm தான் வழி நடத்துகிறது.

இந்த Dravidian Algorithm-மின் சூட்சுமங்கள் அறிந்த தலைவராக இன்றைக்கு நம்மிடத்தில் இருப்பவர் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் அவர் தலைமையில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி, தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவே உழைக்கும். அதற்கு நாம் எந்நாளும் துணை நிற்போம் என்கிற உறுதியினை அளித்து, எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் அவர்கள், பேரவைத் தலைவர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Related Stories

Related Stories