தமிழ்நாடு

ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடம்: பேரவையில் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நேரு!

இன்றைய சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடம்: பேரவையில் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நேரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் கே.என்.நேரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. திருச்சங்கோடு, கொல்லங்கோடு, சோளிங்கர், கம்பம் ஆகிய நகராட்சிகளில் ரூ.45.50 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

2.ரூ.76.30 கோடியில் மாநகராட்சி & நகராட்சி பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

3. கடலூர், தாம்பரம், திண்டுக்கல், கரூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளிலும், இராஜபாளையம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிதம்பரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட ரூ.35 நகராட்சிகளிலும் ரூ.145.82 கோடியில் புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.

4. ரூ.346.60 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தைகள் அமைக்கப்படும். தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சிகள் மற்றும் திருச்செந்தூர், ஜெயங்கொண்டம், செங்கல்பட்டு, நத்திவரம், கூடுவாஞ்சேரி, மயிலாடுதுறை, மன்னார்குடி, தேனி - அல்லிநகரம், கொடைக்கானல், உதகமண்டலம் மற்றும் கூத்தாநல்லூர்.

5.ரூ.55.70 கோடி மதிப்பீட்டில், திருச்சி மாநகராட்சி மற்றும் திருவண்ணாமலை நகராட்சியிலுள்ள பழைய தேக்கத் திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலம் மீட்டெடுக்கப்படும்.

6.ரூ.285.73 கோடியில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 418.57 கி.மீ. நீள மண் சாலைகள், தார்சாலை, கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

7.ரூ.987.19 கோடியில், 2016.41 கி.மீ. நீளத்திற்கு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்.

8.ரூ.32 கோடியில் புதிய பயோ கேஸ் மையங்கள் அமைக்கப்பட்டு, ரூ.22.80 கோடியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 38 பயோ கேஸ் மையங்கள் மேம்படுத்தப்படும்.

9.ரூ.360.88 கோடி மதிப்பீட்டில் கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

10. கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்.

banner

Related Stories

Related Stories