தமிழ்நாடு

“கொடைத்தன்மை மிக்கவர் சரோஜ் கோயங்கா” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“சரோஜ் கோயங்கா அவர்களை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கொடைத்தன்மை மிக்கவர் சரோஜ் கோயங்கா” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“இதழியல், தொழில்துறையில் சாதனை படைத்தவர் என்பது மட்டுமின்றி, சிறந்த மனிதநேயராக இருந்து கொடைத்தன்மை மிக்கவராகவும் விளங்கியவர் சரோஜ் கோயங்கா” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இதழியல் துறையில் பெரும் சாதனை படைத்த எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்கா அவர்களின் மருமகளான சரோஜ் கோயங்கா (94) அம்மையார் நேற்று (24-05-2024) மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.

ராம்நாத் கோயங்காவின் ஒரே மகனான மறைந்த பகவன் தாஸ் கோயங்கா அவர்களின் மனைவியான சரோஜ் கோயங்கா எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிட்டெட் நிர்வாக இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றிவர் ஆவார். மேலும் எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் இயக்குநராக இருந்து ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவையும் அவர் உருவாக்கினார் என்பதும், அதனை 2010-ஆம் அப்போதைய முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதழியல், தொழில்துறையில் சாதனை படைத்தவர் என்பது மட்டுமின்றி, சிறந்த மனிதநேயராக இருந்து கொடைத்தன்மை மிக்கவராகவும் விளங்கியவர் சரோஜ் கோயங்கா அவர்கள்.

அன்னாரை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், கோயங்கா குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories