தமிழ்நாடு

”திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல” : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த நீதிபதி!

"திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல" என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

”திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல” : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாகத்தான் திருவள்ளுவர் தினத்தன்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தற்போது மீண்டும், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள் அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில், "திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல" என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்,”தமிழ் மொழியில் நீதி இல்லாத நூல்களே கிடையாது. தமிழ் என்றால் நீதி, நீதி என்றால் அது தமிழ் மொழிதான். திருவள்ளுவர் எந்த ஒரு சமயத்தையோ, மதத்தையோ சார்ந்தவர் அல்ல" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories