தமிழ்நாடு

மோடிக்கு எதோ ஆகிவிட்டது... தொடர்ந்து உளறி வருகிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு!

மோடிக்கு எதோ ஆகிவிட்டது.. தொடர்ந்து உளறி வருகிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு!

மோடிக்கு எதோ ஆகிவிட்டது... தொடர்ந்து உளறி வருகிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தொடர்ந்து உளறிக் கொண்டு வருகிறார் மோடி என்று கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “ ‘இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை, கடவுள் கொடுத்த வரமாக நான் பிறந்துள்ளேன்’ என மோடி பேசி வருகிறார். அவர் இப்பதான் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அதானி நிறுவனத்திடம் இருந்து, தமிழக மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில், 6,000 கோடி ரூபாய் மோசடி குறித்து மோடியின் முகம் அம்பலமாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெறுகிறார்கள் என்று கூறி வந்த மோடி, தற்போது யார் லஞ்ச மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தொடர்ந்து உளறிக் கொண்டு வருகிறார் மோடி. பிரம்மானந்தா, நித்தியானந்தா இருவரும் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி உள்ளனர். அந்த வரிசையில அடுத்தபடியாக மோடி இடம் பெற்றுள்ளார்.

மோடிக்கு எதோ ஆகிவிட்டது... தொடர்ந்து உளறி வருகிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தாக்கு!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்களை பற்றி தரக்குறைவாக பேசிவிட்டு, தற்போது இஸ்லாமியர் பற்றி தான் எதுவும் பேசவில்லை என்று கூறுகிறார். தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார் மோடி.

தமிழகத்தில் உள்ள பெண்களின் மாங்கல்யம் பற்றி தரம் குறைவாகவும், அவர் இழுவுபடுத்தும் விதமாக பேசிவிட்டு இப்போது நான் அவர்களை பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறுகிறார் மோடி. பிரதமர் மோடி பெண்களின் மாங்கல்யத்திற்கு மரியாதை கொடுக்க மாட்டார் என்று 50 வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரியும். இந்த தேர்தலில் உறுதியாக அவர் வெற்றி பெற மாட்டார்

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, மீதமுள்ள இடங்கள் தான் பாஜகவிற்கு கிடைக்கப்போகிறது. பாஜக - அதிமுக கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து தமிழர்களை வஞ்சிக்க வேண்டும் என்ற வெறிகளைக் கொண்டு சுற்றி வருகிறார் மோடி. தமிழர்களை நம்ப வைக்க வேண்டும் என திருக்குறளை படித்து வருகிறார்.

மோடிக்கு எதோ ஆகிவிட்டது... தொடர்ந்து உளறி வருகிறார் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தாக்கு!

சமஸ்கிருத மொழிக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார், தமிழுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியும், அவர் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று. தமிழர்களை நம்ப வைக்க வேண்டும் என வேட்டி, சட்டையுடன் தமிழகத்திற்கு வருகிறார். மோடியின் சர்வதிகார ஆட்சி மெல்ல மெல்ல நம்மை நோக்கி நகர்ந்து வருகிறது. எங்களை இழிவுபடுத்தினால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை நம்பி வருபவர்கள்.

தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவிற்கு இருந்த பாஜக கட்சி, தற்போது அண்ணாமலை தலைவராக நியமித்த பிறகு டெபாசிட் இழக்கப் போகிறார்கள். பிரதமர் மோடி ஒரு மிருகமாக இருக்கிறாரே தவிர ஒரு மனிதராக தெரியவில்லை.

காமராஜர் கொடுத்த நல்லாட்சி போல் தமிழக முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி கொடுத்து வருகிறார். காலை உணவு திட்டம், சாலை வசதி போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் அவருடைய ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நல்ல ஆட்சி. யார் நன்மை செய்தாலும், அதனை ஸ்டாலின் ஆட்சி என்றும் காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்.

banner

Related Stories

Related Stories