தமிழ்நாடு

சென்னையில் இந்தந்த பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் - விவரம் !

நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.

சென்னையில் இந்தந்த பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் - விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவுதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், 24.05.2024 முதல் 02.06.2024 வரை (10 நாட்களுக்கு மட்டும்) மண்டலம்-9 (பகுதி), மண்டலம்-13 (பகுதி), மண்டலம்-14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இந்தந்த பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் - விவரம் !

எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகுதிப் பொறியாளர் கைபேசி எண்கள்:

மண்டலம் 9 - தேனாம்பேட்டை (பகுதி) - 81449-30909

மண்டலம் 13 - அடையாறு (பகுதி) - 81449-30 913

மண்டலம் 14 - பெருங்குடி - 81449-30 914

மண்டலம் 15 - சோழிங்கநல்லூர் - 81449-30 915

தாம்பரம் மாநகராட்சி:

தலைமைப் பொறியாளர் - 94429-76905

செயற்பொறியாளர் - 82488-88577

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

banner

Related Stories

Related Stories