தமிழ்நாடு

நீலகிரி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வனத்துறை விதித்த புதிய கட்டுப்பாடு - முழு விவரம் இங்கே !

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு நடைபெறுவதால் நாளை 16ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வனத்துறை விதித்த புதிய கட்டுப்பாடு - முழு விவரம் இங்கே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 10 ம் தேதி உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர் கண்காட்சி துவங்கியது.

இந்தாண்டு மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமான டிஸ்னி வேல்டு, 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயில், மிக்கி மவுஸ், தேனி உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருவதோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

நீலகிரி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வனத்துறை விதித்த புதிய கட்டுப்பாடு - முழு விவரம் இங்கே !

இந்நிலையில் இந்த ஆண்டு 126 வது மலர் கண்காட்சியின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 150 )ரூபாய் என இருந்த நிலையில் நுழைவு கட்டணம் அதிகம் எனவும்,இ பாஸ் நடைமுறையில் உள்ள காரணத்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கவும், அதிக கட்டணம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகை குறைவு என்பதால் ஒரு நபருக்கு 150 ரூபாயாக இருந்த நுழைவு 25 ரூபாய் குறைத்து 125 ரூபாய் எனவும், சிறியவர்களுக்கு 75 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்தாண்டு நடைப்பெற்று வரும் 126வது மலர் கண்காட்சியை ஐந்து நாட்களில் சுமார் 82 ஆயிரத்து 835 பேர் கண்டு ரசித்து சென்றுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனுடைய உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FASTTAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் 7- நாட்களுக்கு நடைபெறுவதால் நாளை 16ஆம் தேதி முதல் 22தேதி 7 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories