தமிழ்நாடு

”மோடியின் தூக்கத்தை கலைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்” : ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

மோடியின் தூக்கத்தைக் கலைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

”மோடியின் தூக்கத்தை கலைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்” : ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருக்கிறார். தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உளறிவருகிறார். தற்போது கச்சத்தீவு குறித்து கலர் கலரா பொய்களை கூறிவரும் மோடியின் தூக்கத்தைக் கலைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

மோடிக்குத் தேர்தல் ஜன்னி பிடித்துள்ளது. அதனால் தான் இதுவரை எந்த பிரதமரும் இத்தனை தடவை பிரச்சாரத்திற்கு வந்ததில்லை. மோடி தமிழ் நாட்டுக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு 1 லட்சம் வாக்குகள் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories