தமிழ்நாடு

கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்த பிரதமரே இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்த பிரதமரே இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞர் அவர்கள் கச்சத்தீவை தாரை வார்க்கவில்லை. ஏனென்றால் அவர் எந்தக் காலத்திலும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தது இல்லை. பிரதமராக இருந்திருந்தால் மட்டும் தான் அதனைச் செய்திருக்க முடியும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பா.ஜ.கவினர் பேசி வருகிறார்கள்.

தற்போது பிரதமர் கூட இதே கருத்தைதான் கூறி இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.கவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்றும் வரலாறு எதுவும் தெரியாமல் உளறிக்கொட்டி இருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories