தமிழ்நாடு

தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக பணப்பட்டுவாடா செய்த அதிமுக : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக அ.தி.மு.கவினர் நேரடியாக பணப்பட்டுவாடா செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக பணப்பட்டுவாடா செய்த அதிமுக :  இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர் அலங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

கல்லணை கிராமத்தில் பிரச்சாரம் செய்து முடித்துக் கொண்டு நாராயணசாமி கிளம்பியவுடன் அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள், கூட்டம் கூடுவதற்காக அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலா ரூ.100 விதம் நேரடியாகப் பணப்பட்டுவாடா செய்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து பணப்பட்டுவாடா செய்தது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக அ.தி.மு.கவினர் நேரடியாக பணப்பட்டுவாடா செய்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories