தமிழ்நாடு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது ? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது ? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வந்த நிலையில், இவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் இந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த சட்டமன்ற தொகுதிக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது ? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களுக்கு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்க்பட்டுள்ளது. அதன்படி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு உட்பட நாடு முழுவதும் மொத்தம் 26 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories