தமிழ்நாடு

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: கண்ணாடி மாளிகை - Super Tree டவர்!

சென்னையில் லைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது.

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: கண்ணாடி மாளிகை - Super Tree டவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1910-ல் தோட்டக்கலை சங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில், இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்கு மாறியது. கடந்த 1989-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் 17 ஏக்கர் நிலத்தை மீட்டார். இதையடுத்து, அப்பகுதியில் செம்மொழிப் பூங்கா கடந்த 2009-ல் உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள நிலம் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின்னர் மீட்கப்பட்டது. கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில், ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கண்ணாடி மாளிகை மற்றும் tree டவர் அமைக்க தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது. ரூபாய் 7 கோடி செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட உள்ள இந்த கண்ணாடி மாளிகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு பூக்கள் இடம்பெற உள்ளது.

இதேபோன்று 30 மீட்டர் உயரத்தில் சூப்பர் ட்ரீட் டவர் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரத்தை சுற்றியும் பூக்கள் இருக்கும். கோபுரத்தின் நடுவில் அமைக்கப்படும் மின் தூக்கியில் சென்று கொண்டு பார்வையாளர்கள் இந்த பூக்களை ரசிக்கலாம். மேலும் கோபுரத்தின் மேல் பகுதிக்கு சென்று பூங்கா மொத்தத்தையும் பார்த்து ரசிக்கும் வகையில் 7 கோடி செலவில் இந்த கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

இந்த இரண்டு பணிகளையும் மேற்கொள்வதற்கான நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை துறை டெண்டர் கோரி உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட அடுத்த மூன்று மாதத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories