தமிழ்நாடு

வடஇந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக மீண்டும் வதந்தி - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !

வடஇந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக மீண்டும் வதந்தி - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதிலும் பாஜக ஆதரவு தளங்களில் இதுபோன்ற செய்தி அதிகளவில் பகிரப்பட்டது, இந்த வதந்திகள் மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உண்மை தன்மையை தெளிவுபடுத்தியதுடன், வதந்தி பரப்பிய சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அது போன்ற வதந்தி பரபரப்பட்டுள்ளது.

அது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது பின்வருமாறு, "19.02.2024 அன்று 'நியூஸ் 18 பீகார்' ட்விட்டர் (X) ஹேண்டிலில் (@நியூஸ்18பிஹார்) ஹிந்தியில் ட்வீட் செய்து, 48 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்த வீடியோவில், சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை குற்றவாளிகளால் தூக்கி வெளியே எறியப்பட்டதாகவும், இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்தார் என்றும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மேற்கூறிய செய்தியை அவர்களது முகநூல் பக்கத்திலும் மற்றும் யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி வீடியோவில் இறந்த நபரின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடஇந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக மீண்டும் வதந்தி - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !

மேற்கூறிய செய்தி முற்றிலும் தவறானது ஆகும், இது போன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்றோ, ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பரப்பபட்டுள்ளது என்பதனையும், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் சென்னை பெருநகர காவல் எல்லையில் நடக்கவில்லை என்பதனை சென்னை பெருநகர காவல் துறை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது. மேற்குறிப்பிட்ட வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 06-02-2024 அன்று பீகார் மாநிலம், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்காலியா என்பவர் விழுப்புரத்திலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும் ரயில் எண்.60208இல், பிளாட்ஃபார்ம் எண். 2 இல் இருந்து ரயிலின் மேலே ஏறிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து விழுப்புரம் அரசு இரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட காவல் துறை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, பீகார் மாநிலம் பாட்னா வரை தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

அஸ்வினி குமார் உபாத்யாய் Vs யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழக்கில் (W.P. (Civil) எண். 943 இன் 2021), மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பித்த 13.1.2023 தேதியிட்ட உத்தரவில், "வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மீது தானாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும், எனவே, ச/பி 153, 153A (1)(a), 505 (1) (b) & 505 (2) இதசவின் கீழ் மேற்கூறிய தவறான செய்திகளுக்கு எதிராக சென்னை பெருநகர காவல் துறை, மத்திய குற்றப்பிரிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தீங்கிழைக்கும் அவதூறு தகவல்கள் / காணொளி / சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அனைவரும் தவிர்க்குமாறு கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories