தமிழ்நாடு

🔴 LIVE - TAMIL NADU BUDGET 2024 - 25 : துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்!

தமிழ்நாடு அரசின் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

🔴 LIVE - TAMIL NADU BUDGET 2024 - 25 : துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்!

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு!

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி ஒதுக்கீடு!

உயர்கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி ஒதுக்கீடு!

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக்கு ரூ.2,295 கோடி ஒதுக்கீடு!

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,557 கோடி ஒதுக்கீடு!

நீர்வளத்துறைக்கு ரூ.8,398 கோடி ஒதுக்கீடு!

2 மணி நேரம் 7 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்து, உரையை நிறைவு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

கோயம்புத்தூரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம்!

இளைய தலைமுறையினர் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

மினி பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

சென்னை மெட்ரோ திட்டப்பணிகளை விரிவுப்படுத்த ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!

சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

2025 டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

“தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்”

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து திட்டமிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்” என்ற புதிய இயக்கம் உருவாக்கப்படும்.

கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்.

விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடியில் புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

புதிய ஜவுளி பூங்காக்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தஞ்சை அருகே புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு!

மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.70 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு!

ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்படும்!

“அடுத்த 2 ஆண்டுகளில் 5000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்படும்.

இதுவரை 60, 567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.”

உயர் கல்வித்துறைக்கான திட்டங்கள்!

உயர் கல்வித்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு!

அரசு பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு!

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறைக்கான திட்டங்கள் !

பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு!

ரூ.1000 கோடி செலவில் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன் மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகம் - அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும்; மேலும் 2,50,000 மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள்.

நடப்பாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!

விடியல் பயணத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இதுவரை 444 கோடி முறை பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவித்தொகை பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிக்காட்டுதல்கள்

ஆழிசூழ் தமிழ் நிலப்பரப்பிற்குள் அழையா விருந்தினர் போல், அவ்வப்போது இன்னல்கள் பலகொடுத்திடும் இயற்கை பேரிடர்கள் ஒருபுறம், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம்.

இந்நிலையில், தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அமைத்து செல்ல உதவும், நிதிநிலை அறிக்கையை உருவாக்கிட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிக்காட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இந்தியாவே பின்பற்றும்!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் உள்ள மகளிரும் பின்பற்றும் வகையில் எதிர்காலத்தில் நாடே இந்த திட்டத்தை பின்பற்றும்.

சென்னைக்கான திட்டங்கள்!

சிங்கார சென்னை 2.O திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 கோடியில் சென்னையில் சாலைகள் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.1500 கோடியில் அடையாறு கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் கடற்கரையை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடையாறு கால்வாய் ஓரங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

வட சென்னை வளர்ச்சி திட்டம் எனும் செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் புதிதாக அறிமுகம்!

நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட உள்ளது. இந்நிலையில், “தடைகளைத் தாண்டி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

🔴 LIVE - TAMIL NADU BUDGET 2024 - 25 : துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்!

மேலும் இந்த பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான, புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது.

காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 182.22 கோடியாக மேலும் உயரும் என்றும் திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் அது19.30 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.

வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் ரூ.15 ஆயிரத்து 309.40 கோடியாகவும், வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளைவிட 32.10 சதவீதமாக உயர்ந்து, ரூ.20 ஆயிரத்து 223.51 கோடியாக வருவாய் இருக்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருந்தது. திருத்த மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 659.67 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

🔴 LIVE - TAMIL NADU BUDGET 2024 - 25 : துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்!

வரிவசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2024-25-ம் ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 583.12 கோடியாக குறையும் என்றும் அதன் தொடர்ச்சியாக 2025-26-ம் ஆண்டில் ரூ.1,218.08 கோடி வருவாய் உபரிக்கு அது வழிவகுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், வரும் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை ரூ.92 ஆயிரத்து 74.91 கோடி என அப்போது மதிப்பிடப்பட்டு இருந்தது. 31.3.2024 அன்று மொத்தக் கடன் நிலுவை ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 28.83 கோடியாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான வீதம் 25.63 எனவும் இருக்கும். இது, 15-ம் நிதிக்குழு நிர்ணயித்துள்ள 29.1 சதவீதம் என்ற எல்லைக்குள்ளாகவே இருக்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

அதில், வரும் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய்கள், வரியல்லாத வருவாய்கள், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

20-ந் தேதியன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். 21-ந் தேதி காலை மற்றும் மாலை நேரத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு 22ந் தேதியன்று அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

banner

Related Stories

Related Stories