தமிழ்நாடு

கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - கல்வியாளர் முருகையன் புகழாரம் !

கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது என கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி கூறியுள்ளார்.

கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - கல்வியாளர் முருகையன் புகழாரம் !
news
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (2023-24 பட்ஜெட்: ரூ.40,299 கோடி, 2024-25 பட்ஜெட்: ரூ.44,042 கோடி)

அதே போல உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (2023-24 பட்ஜெட்: ரூ6,967 கோடி 2024-25 பட்ஜெட்: ரூ.8,212 கோடி). தமிழ்நாடு அரசின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது என கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி கூறியுள்ளார். இது குறித்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், "நிதி நெருக்கடி காலகட்டத்திலும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு மாற்றான் தாய் மறப்பான்மையோடு நிதியினை பகிர்ந்து அளிக்காத பட்சத்திலும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கல்வியில் ஒரு புதிய புரட்சியை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - கல்வியாளர் முருகையன் புகழாரம் !
news

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் பொழுது அறிவிக்கப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கையில் 34 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் மத்தியில் உயர் கல்வியில் சேர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காலை உணவு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது மாணவர்கள் மட்டுமல்லாது தாய்மார்கள் மத்தியிலும் வெகு நாட்களாக இருந்து வந்த சுமை நீங்கும்.

காலை உணவு திட்ட விரிவாக்கம், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம், தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் பள்ளிக் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு தமிழ்நாடு அரசு கொண்டு செல்கிறது. கல்விக்காக முன்னெடுக்கும் திட்டங்கள்தான் அடுத்த நூற்றாண்டுகளுக்கு நாட்டை முன்னேற்றம் என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories